விடியல் விடியல்னு கேள்விபட்ருக்கோம் ஆனா இந்த மாதிரி விடியல பார்த்தது இல்லை முதல்வரை பங்கம் செய்த சென்னைவாசிகள்! வைரல் வீடியோ!

MK Stalin Flood Visit

தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் கடந்த ஞாயிறு மதியம் முதல் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரத்தை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் போகும் இடமெல்லாம் முதல்வரை பார்த்து கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளார்கள் மக்கள். விடியல் ஆட்சி என கூறி ஆட்சியை பிடித்த திமுகவை அதே விடியல் வார்த்தையை வைத்து மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளார்கள்.

2015 மழை போல் தற்போது இல்லை மேலும் தொடர் மழையும் இல்லை ஆனால் ஒருநாள் பெய்த மழையில் சென்னை மாநகரம் முழ்கியது. கடந்த ஆண்டும் மழை பெய்தது. ஆனால் சென்னை மாநகரம் இந்த அளவிற்கு பாதிப்பு அடையவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழை நேரத்தில் துரித நடவடிக்கை எடுத்தது அன்றைய அதிமுக அரசு. இதுதான் தற்போது மக்கள் குமுறலுக்கு காரணம்.

இது தான் விடியலா என்று சென்னை வாசிகள் நடுத்தெருவில் முதல்வர் வாகனத்தை மறித்து பேச்சு வெள்ளத்தில் சிக்கிய தங்களுக்கு உணவு வழங்க வேண்டாம், மழை நீரை வெளியேற்றினாலே போதும் என கொரட்டூர் பகுதிக்கு சென்ற முதல்வரிடம், அப்பகுதி பெண்மணி ஒருவர் கோரிக்கை என
திமுக ஆட்சியின் மீதுள்ள வெறுப்பை நேரடியாக காட்டி வருகிறார்கள்.

சென்னை கொரட்டூர் பகுதிக்கு முதல்வர் வருவதாகக் கூறி, பொதுமக்களை அழைத்து வந்து, வெகுநேரம் காத்திருக்க வைத்தனர். மழையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்தனர். பின்னர் முதல்வர் திரு.ஸ்டாலின் கொரட்டூர் சென்று, மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளை ஆய்வு செய்யாமல், மக்களுக்கு உணவளிக்கச் சென்றார். அப்பொழுது பெண் ஒருவர் “தங்களுக்கு உணவெல்லாம் வேண்டாம், தங்கள் பகுதியை ஆய்வு செய்து தேங்கிய மழை தண்ணீரை உடனடியாக வெளியேற்றுங்கள்” நிரந்தர தீர்வு கொடுங்களேன் என கூறினார்.

அடுத்து கொளத்தூர் தொகுதியில் முதல் வர் ஸ்டாலின் காரை நிறுத்திய ஒருவர் விடியல் விடியல் னு சொன்னீங்க நீங்க சொன்ன விடியல் இதுதானா என மொத்த விடியலும் ஒரே நாளில் விடிஞ்சிருச்சு என புலம்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

2011 ல் இருந்து ஸ்டாலின் தான் கொளத்தூர் MLA.1967 ல் இருந்து 3 முறைதான் MP வேறு கட்சிக்கு போனது மற்றபடி இந்த கொளத்தூர் தொகுதி சென்னை வடக்கு MP நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டது அது DMK வசம் தான் இன்றுவரை இருந்து வருகிறது.10 வருடம் MLA நிதியிலிருந்து கொளத்தூர் வடிகால் நீர் உட் கட்டமைப்பை ஸ்டாலின் சரி செய்திருக்கலாம்.

35 ஆண்டுகளாக குளத்தூர் MP தொகுதி DMK வசம் தான் இருந்திருக்கிறது, இருந்து வருகிறது. MP நிதியிலாவது இந்த 35 ஆண்டுகளில் கொளத்தூர் வடிகால் உட் கட்டமைப்பை உலக தரமாக கொண்டுவந்திருக்கலாம்.இன்று வரை முழங்கால் அளவு தண்ணிதான். என்ன தான் திமுக இத்தனை வருடத்தில் கொளத்தூரில் செய்தது?

அதுமட்டுமில்லாமல் எடப்பாடி செய்ததை ஸ்டாலினால் செய்யமுடியவில்லை என்பதை இந்த மழை நிரூபித்துள்ளது. மேலும் சென்னை திமுகவின் கோட்டை என கூறி வந்த நிலையில் அது கோட்டை அல்ல ஓட்டை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சதற்போது சென்னை மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள் யார் நல்லது செய்வார்களோ அவர்களுக்கு தான் உள்ளாட்சி தேர்தலில் எங்களின் ஓட்டு என்பதை உறுதியாக தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version