திராவிட கட்சிக்கு சவால் விடும்வகையில் கலக்கும் விழுப்புரம் மாவட்ட பாஜக.

விழுப்புரம் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது.

இதன் ஒரு பகுதியாக கடந்த சிலதினங்களுக்கு முன் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் சாதனை குறித்து விளக்கம் விதமாக சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.

அதை அழித்த விடுதலை சிறுத்தை கட்சியினரை கைது செய்ய கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்தனர்.

பாஜக ஆர்ப்பாட்டம் என்றால் என்றும் 50ல் இருந்து 200 பேர் வரைதான் வருவார்கள் என்று நினைத்து காவல்துறையினர் 50 பேர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக 1,500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதனால் போக்குவரத்து பாதித்தது.இதுனால் வரை விழுப்புரம் மாவட்டத்தில் பாஜகவில் இத்தனை பேர் உள்ளனரா என்று மக்கள் பேச துவங்கினர்.

இதன் ஒருபகுதியாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் மாற்று கட்சியிலிருந்து மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் தங்களை பாஜகவில் இணைந்தனர்.

உடன் மாவட்ட பொது செயலாளர் ராஜேந்திரன்,மாநில பிரச்சார பிரிவு செயலாளர் விநாயகமூர்த்தி, ஒன்றிய தலைவர் ஞானசேகரன், முருகப்பெருமான் ,மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, ஜெயலட்சுமி ,நாகப்பன் ,மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துலட்சுமி ,செல்வி ,மாவட்ட விவசாய அணி தலைவர் குட்டியாண்டி,மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் முருகன்(எ)அய்யனாரப்பன், மாவட்ட ஓபிசி அணி பொதுச்செயலாளர் முத்துலட்சுமி, நிர்வாகிகள் மணிவண்ணன், ராம்குமார் ,சகாதேவன், சுப்பிரமணியன், சதீஷ், டாக்டர்செந்தில், கந்தசாமி, கவிப்பிரியா, ராஜாத்தி, கோதண்டபாணி ,சீனிவாசன், ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version