கடந்த 15 ஆம் தேதி லடாக் எல்லையில் இந்தியா சீனா இரு நாட்டு வீரர்களிடையே மோதல் சம்பவம் நடந்தது. இதில் பிந்தைய ராணுவவீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர் இழந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. நூறுக்கும் மேற்பட்ட சீன வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நட்டு ஊடகங்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா சீனா இடையே போர்ப் பதற்றம் நிலவி வருகிறது,
இந்த நிலையில் இரு நாடுகளுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் , இந்தியப் பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியது. இந்நிலையில், பிரெஸ்ஸல்ஸ் மாநாடு நேற்று காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது. அப்போது, ஜெர்மனியில் அமெரிக்கப் படைகள் குறைக்கப்பட்டு வருவது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் போம்பி யோவிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரு கிறது. அதுமட்டுமின்றி, தென் சீனக் கடல் பகுதியிலும் அந்நாடு ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது.
மேலும், லடாக் எல்லையில் சீனா தனது ராணுவத் துருப்புகளை அதிகப்படியாக குவித்து வருகிறது. எனவே, சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டால் அவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ராணுவப் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதி யாகவே, ஜெர்மனியில் நிறுத்தப்பட் டிருந்த 52 ஆயிரம் அமெரிக்கப் படைகள் 25 ஆயிரமாக குறைக் கப்பட்டுள்ளன.
இதேபோல், மற்ற நாடுகளில் இருக்கும் அமெரிக்க ராணுவ வீரர்களையும், சீன அச்சுறுத்தலை சமாளிக்க ஏதுவாக கொண்டு வருவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள நிலவரத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெறுகிறது. இவ்வாறு மைக் போம்பியோ கூறினார்.