தாலிபான்களிடமிருந்து விடுதலை வேண்டும்! போராடும் மக்கள் ஆப்கானில் வெடிக்குமா புரட்சி

oredesam

Oredesam Kabul people

தலிபான் அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆப்கான் மக்கள் நள்ளிரவி ல் வீடுகளை விட்டு வீதிகளில் இறங்கி விளக்கேந்தி போராடுகிறார்கள்.

தலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் சீரழிந்து விடும் என்பது உறுதி. அமெரிக்க ஆதரவு படைகள் இருக்கும் வரைசுதந்திரமாக வாழ்ந்த மக்கள் இப்பொழு து காட்டுமிராண்டிகளிடம் சிக்கி கொண்டார்கள்.
இது விதி.

அமெரிக்க அதிபர் பைடன் தாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தானை தாரைவரித்துவிட்டார். ஆப்கானை தாலிபான்களோ ஆப்கானிஸ்தானை பாகிஸ்தானுக்கு கொடுக்க பாகிஸ்தான் வாங்கியகடனுக்கு ஆப்கானை சீனாவிடம் அளித்து இருக்கிறது.

ஆஃப்கானிஸ்தானில் 60% பேர் ஹசாரா, உஸ்பெக், தஜிக் – ஷியா – மக்கள். சன்னி தாலிபான்கள் பெரும்பாலும் பஷ்டூன் இனம். பஷ்டூன்களை பொறுத்தவரை, ஆஃப்கானிஸ்தான் அவர்களுக்கு மட்டுமே சொந்தம்.

மற்ற ஷியா ஹசாரா, உஸ்பெக், தஜிக் இனங்கள் தாலிபான்களை பொறுத்தவரை காஃபீர்கள் – கொல்லப்பட வேண்டியவர்கள். அதன் படி கொன்று குவிக்கிறார்கள்.பஷ்டூன் தாலிபான்களுக்குள் ஏகப்பட்ட தலைவர்கள் & குழுக்கள். அவர்களும் பதவிக்கு அடித்துக் கொள்கிறார்கள்

ஆப்கானை இந்தியாவின் பிடியில் இருந்து விலக்கி சீனாவின் கைகளில் அளிக்க வேண்டும். இது தான் பைடனின் ஆசை. அதை செய்து காட்டினார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் அங்கங்கே குண்டு வெடிப்பு நடத்தி வருகிறது பாகிஸ்தான் தெரிக் தீவிரவாத அமைப்பு. அது தாலிபான்களுக்கு எதிரான அமைப்பு. பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திவரும் நிலையில் அடுத்து அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.

Exit mobile version