எப்படி சாதித்தார் ஜெயலலிதா? எந்த சக்தி அவரை நடத்திற்று?

அந்த பெண்மணி ஒரு அதிசயம், தலைவிதி ஒருவரை எப்படி எல்லாம் இழுத்து செல்லும் என்பதற்கு மிக மிக சிறந்த உதாரணம்.

சாதாரணம் குடும்பபெண்ணாக வாழ்ந்து முடித்திருக்கவேண்டிய அவரை சினிமாபக்கம் இழுத்தது தாயின் வாழ்வு. தந்தை உருப்படியாக இருந்தால் ஜெயா சினிமாவுக்க்கே வந்திருக்கமாட்டார்

சினிமாவில் நடித்து ஓய்வுபெற்று இன்று கே.ஆர் விஜயா போல, சரோஜா தேவி போல‌ அமர்ந்திருக்கவேண்டியவர் வாழ்வினை மாற்றிபோட்டது ராம்சந்தர்

அதன் பின் ஜெயாவினை செதுக்கியது சோ.ராமசாமி,ஒரு பார்பானிய முதல்வராக அவரை நிறுத்த சோ பாடுபட்ட காலங்களில் ஓங்கி அடித்து ஜெயாவினை திராவிட அரசியல்வாதியாக வைத்திருந்தது நடராஜன்

இன்னொரு சினிமாமுகத்தை வளரவிட கூடாது என கங்கணம் கட்டிய கருணாநிதி, அவர் வளர்த்த புலிகள், அந்த புலிகளால் கொல்லபட்ட ராஜிவ் என ஏக காரணங்கள் விதியின் வலிமையாய் உருவாகி ஒன்று சேர்ந்து இரும்பு பெண் ஜெயலலிதா என்பவரை உருவாக்கியது

தமிழக வரலாற்றில் ராஜாஜிக்கு பின் வந்த பிராமண முதல்வர் ஜெயா. நிச்சயம் அவர் அதிசயம் இன்றுவரை அதிசயம். கருணாநிதி போல நீண்ட ஆயுள் இருந்தால் வங்கத்து ஜோதிபாசு சாதனையினை அவர் முறியடித்திருக்கலாம்

எப்படி சாதித்தார் ஜெயலலிதா? எந்த சக்தி அவரை நடத்திற்று?

விஷயம் மிக மிக எளிது

திமுக எனும் சமூகவிரோத தேசவிரோத இயக்கம் யாருக்கும் பிடித்தமானது அல்ல, மாறாக ராம்சந்தரை மனமார இச்சமூகம் கொண்டாடியது, திமுக என்பது பாம்பு ஆனால் ராம்சந்தர் தலைமேல் இருக்கும் பாம்பு என்பதற்காக கொண்டாடியது

ஒரு கட்டத்தில் பாம்பை அவர் தூக்கி எறிய அவர் தெய்வமானார், அந்த பாம்பை காட்டியே இங்கு பெரும் அரசியல்வாதியானார் ஜெயா

அந்த பாம்பு கடைசிவரை ரஜினி தலை, மூப்பனார் தலை, விஜயகாந்த் தலை மற்றும் காங்கிரஸ் தலை என எதிலாவது ஏறமுயன்று ஆட்சிக்கு வந்ததே தவிர தனிபட்ட தமிழக திமுக அனுதாபம் என ஏதுமில்லை

ஜெயா இவ்வளவு ஊழல் வழக்கு சர்ச்சை, சிறை என பெரும் சிக்கலை சந்தித்தும் எப்படி மக்கள் முன்னால் ராணிபோல் வாழ்ந்தார் என்றால் விஷயம் எளிது

மூன்று விஷயங்களில் அவர் உறுதியாய் இருந்தார்

முதலாவது ராஜாஜிக்கு பின் பகிரங்கமாக இந்து ஆலயம் சென்ற இந்து முதல்வர் அவர்தான், நெற்றியில் குங்குமத்துடன் ஆலயங்களுக்கு செல்வதும் , யாகங்களை செய்வதுமாய் தன்னை ஒரு இந்து என பகிரங்கமாக காட்டினார்

ராமசந்திரனுக்கும் இந்து அபிமானம் இருந்தது பக்தி இருந்தது, ஆனால் தான் அண்ணாவின் சீடன் என்பதால் கொஞ்சம் அஞ்சினார் எனினும் ஆங்காங்கே தன் பக்தியினை காட்ட தவறவில்லை. திருவரங்க ஆலய தென்காசி ஆலய புணரமைப்பு, கிருபானந்தவாரியுடன் சந்திப்பு என அவர் தன்னை மறைமுகமாக இந்துவாக காட்டினார்

ஆனால் ஜெயா பகிரங்கமாக தான் ஒரு இந்து என நிரூபித்தார் தமிழ்நாடு அவரை அள்ளி அணைத்து கொண்டது, ஊழல் புகாரை எல்லாம் அது கண்டுகொள்ளவில்லை

ராமருக்கு இங்கு கோவில்கட்ட வேண்டும் என சொன்ன தமிழக உச்ச ஒரே பிரபலம் அவர்தான்.

ஜெயாவின் இரண்டாம் முத்திரை நாட்டுபற்று, அன்றில் இருந்தே அவரின் தேசிய சிந்தனையும் அதில் இருந்த உறுதியும் வியக்கதக்கது. 1983ல் தன் கன்னிபேச்சிலே பாராளுமன்றத்தில் வடகிழக்கு மாநில சிக்கல் பற்றி அவர் பேசியதை கண்டுதான் இந்திரா அவரை அணைத்துகொண்டார்

ஜெயா அன்று பேசிய பேச்சின் , அவர் தொட்ட சிக்கலின் விளைவுதான் இன்றைய குடியுரிமை சட்ட திருத்தம்.

ஆம் திராவிடம் தமிழ் இத்தியாதி என பேசிகொண்டிருந்த தமிழக எம்பிக்கள் மத்தியில் தேசிய சிக்கலை பேசிய முதல் எம்பி ஜெயா

அது ஈழவிவகாரத்தில் தெரிந்தது, புலிகளை பகிரங்கமாக எதிர்த்தார், இந்திய அமைதிபடை இலங்கையில் இருக்கவேண்டும் என்றார், ஒரு கட்டத்தில் புலிகளின் ஹிட் லிஸ்ட்டிலும் இருந்தார், திருப்பெரும்புதூருக்கு அடுத்து கிருஷ்ணகிரியில் ராஜிவும் ஜெயாவும் பங்குபெறும் கூட்டம் இருந்தது, அங்கு இருவரையும் மொத்தமாய் தூக்க முயன்றனர் புலிகள், ஆனால் ஏதோ முடிவில் ராஜிவினை மட்டும் மாய்த்தனர், ஜெயாவின் நல்ல நேரம் புலிகளின் கெட்ட நேரம் அது.

இறுதிவரை பிரபாகரனை பிடித்து தூக்கில் போடவேண்டும் என உறுதியாய் இருந்தவரும், 2009ல் புலிகள் மக்களை விடுவித்து சரணடைய வேண்டும் என சொன்னவரும் அவரே

2009ல் அவர் எதிர்கட்சி ஆனால் கருணாநிதிக்கு ஆதரவாகவே ஈழவிவகாரத்தை கையாண்டார், நெருக்கடி கொடுக்கவில்லை தேசபற்று என்பது இதுதான், ஒருவேளை திமுக டெல்லி ஆதரவினை வாபஸ் பெற்றால் நான் டெல்லியினை ஆதரிப்பேன் என்றதெல்லாம் கைதட்ட வைக்கும் துணிச்சல்

ஜெயாவின் மாபெரும் வெற்றிக்கு காரணம் யாரை எப்படி கையாள வேண்டுமோ அப்படி கையாண்டது

சோனியா நாட்டை உருப்படவிடமாட்டார் என்பது அவருக்கு தெரிந்திருந்தது, அத்வாணி ஒரு முடிவிலும் உறுதியாக இருக்கமாட்டார் என்பதும் அவருக்கு தெரிந்தது, பிந்தைய் காட்சிகள் அதை உண்மை என் காட்டின.

அத்வாணியினை ஒதுக்காமல் பாஜக உருப்படாது என முதலில் தைரியமாக சொன்னவர் அவர்தான் , அதைத்தான் மோடியின் வரவு உறுதிபடுத்தியது

கட்சிக்குள் புது பார்முலாவினை வைத்திருந்தார், தொண்டர்களை உற்சாகபடுத்த புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்துகொண்டே இருந்தார், யாரும் கட்சிக்குள் தன்னை மீறி ஆட்சி செலுத்தமுடியாதபடி தூக்கி எறிவதும் மிதிப்பதும் தலைகீழாக தொங்கவிடுவதுமாக இருந்தார்

அதுதான் அவர் 30 ஆண்டு கட்சியினை கொண்டு செல்ல காரணம்

ஜெயாவின் தனிபட்ட குணம் வேறு என்றாலும் மக்களின் நாடிதுடிப்பினை சரியாக பிடித்து வைத்திருந்தார், பெண்களின் கண்ணீருக்கு அவரிடம் எப்பொழுதும் பதில் இருந்தது

அது மதுகடையோ,லாட்டரியோ, சமையலறை சிக்கலோ எதுவென்றாலும் உடனே தீர்வு சொன்னார், பாலியல் மிரட்டல் ரவுடிகள் இன்னும் பிற தாதாக்கள் எல்லாம் அவரால் மேலே அனுப்பபட்டனர்

நில ஆக்கிரமிப்பு, மதுகடை அட்ட்காசம், ரவுடியிசம், ஆன்மீகத்துக்கு தடை என பெண்கள் வெறுக்க்கும் எல்லா விஷயத்தையும் அவரும் வெறுத்தார், பெண்களின் சிக்கல் அவருக்கு எளிதாய் புரிந்தது அதை உடனே தீர்த்தார்

அவருக்கிருந்த மாபெரும் செல்வாக்கின் உள் அர்த்தம் இதுதான்..

ஜெயாவின் 1991 முதல் 1996 வரையான ஆட்சி நிச்சயம் சரியில்லை, ஜெயாவுக்கும் அனுபவமில்லை புது பதவி புது அரசியல் என்பதில் திணறினார்

ஆனால் பின்பு அரசியல் கற்றார், அதன்பின் அவரை வீழ்த்துவார் யாருமில்லை, கருணாநிதியினை ஓட அடித்ததில் ஜெயாவுக்கு நிகர் அவர்தான்

ஜெயா நினைத்தால் டெல்லியில் சோனியாவினை ஆதரித்து வாஜ்பாயினை ஆதரித்து மந்திரி பதவிகள் வாங்கியிருக்கலாம் ஆனால் அதன் சில ஆபத்துக்களை உணர்ந்து தவிர்த்தார், அது வாழ்த்துகுரியது

ஆனால் 15 வருடம் டெல்லியில் இருந்த திமுக தமிழகத்துக்கு என்ன செய்தது என்றால் ஒன்றுமில்லை, அவ்வகையில் ஜெயா எவ்வளவோ மேல், அவரிடம் கொள்கையாவது இருந்தது

நிச்சயம் இங்கு மாபெரும் பிம்பமாக, இரும்பு மங்கையாக திழந்தவர் ஜெயா, அவர் இன்னும் பெரும் உச்சங்களை அடைந்திருக்கலாம் கொடும் விதி அவருக்கு இரு உருவில் வந்தது

ஒன்று அவருக்கான குடும்பம் அமையாமல் அவர் தனியாகவே வாழ்ந்தது இன்னொன்று சசிகலா குடும்பம்

நுனிநாக்கு ஆங்கிலமும் மேல்மட்ட வாழ்வுமாக வலம் வந்த ஜெயாவுக்கும் 5ம் வகுப்பினை தாண்டா பட்டிக்காட்டு சசிகலாவுக்குமான நட்பு இன்றுவரை ஆச்சரியமே

என்னமோ தெரியவில்லை துரியனிடம் மாட்டிய கர்ணனாக அவர்களிடம் அடங்கி கிடந்தார், அதில் சில நியாயமான நன்றிகடன் பக்கங்களும் இருந்தன‌

ஆம் ஜெயாவினை ஆட்சிக்கு வரகூடாது என முதலில் விரட்ட நினைத்தவர் ராம்சந்தர், அதன் பின் ஜாணகி அணி என ஏராளம்

ஒரு கட்டத்தில் ஜெயாவே அரசியலை விட்டு விலக தயாராக இருந்தார்

ஆனால் யானை தன்பலம் அறியாது என்பதை போல அவர் பலத்தை அறிய வைத்தவன் நடராசனும் சசிகலாவும். ஜெயா முதல்வராக வேண்டும் என ஆசைபட்ட ஒரே குடும்பம் சசிகலா குடும்பம்

நிச்சயம் அவரை பாதுகாத்து முதலமைச்சர் ஆக்கியது அவர்களே, அதனால்தான் துரியனுக்கு கர்ணன் போல அவரால் அவர்களை விட்டுகொடுக்க முடியவில்லை

அவர்கள் யாராயினும் தன் நம்பிக்கைகுரியவர்கள் தன் நலம் விரும்பிகள் என கண்டார்.

சொந்தமும் ராம்சந்தரும் இன்னும் பலரும் தன்னை ஏமாற்றிய உலகில், தன்னை பயன்படுத்தி தூர எறிந்தவர்களையே பார்த்த உலகில், சசிகலா என்பவர் தனக்காக தன்னை முதலைச்சமாராக படும் பாடுகளை கண்ட பொழுது அவர் மனம் இரங்கியது

அந்த இரக்கம் கடைசி காலம் வரை இருந்தது

ஜெயாவின் சாவில் மர்மம் இருப்பதாக நாம் கருதவில்லை, ஜெயா மகாராணியாக இருந்தாலும் மானிட குணங்களின் பலவீனம் அவருக்கும் இருந்தது, 60 வயதில் வரும் மனகுழப்பம் இருந்தது வழக்குகள் அவரை பயமுறுத்தின‌

ஒருமாதிரியான ஜெயாவினை கட்டுபடுத்த யாருமில்லை, சொன்னால் கேட்கும் ரகமல்ல ஜெயா உணவு முதல் எல்லாம் அவர் விருப்படி இருந்தது அது உடல் நிலையினை பாதித்தது

கடைசி காலங்களில் நடக்க தடுமாறினார், வீடியோ கான்பரன்சிங் ஒன்றில் மட்டும் தோன்றினார்

உடல்நிலையினை விட வழக்கு அவரை பயமுறுத்தியது, தப்ப ஒரே வழி தான் பிரதமராவது என உணர்ந்தார், உச்சபட்சமாக 39 எம்பிக்களை பெற்று பலமானார்

ஆனால் விதி மோடிவடிவில் வந்ததில் மனதால் உடைந்தார் ஜெயா ஆனாலும் உடன் ஆபத்து இல்லை

எனினும் இனி வழக்குகள் தன் கையினை கட்டிபோடும் என அஞ்சினார், பாஜகவின் முகங்கள் அவர் மட்டுமே அறிந்தது என்பதும் அந்த சித்தாந்தம் இனி என்னவெல்லாம் செய்யும் என்பதெல்லாம் அவர் மனகண்முன் ஓடியது

பாம்பின் கால் பாம்பறியும் என்பது அதுதான், இதனால் குழம்பி தவித்த ஜெயா உடல் நலிவுற்றார் அப்படியே அப்பல்லோவில் போராடி இறந்தார்

அங்கு மர்மம் ஒன்றும் அல்ல, சசிகலா ஜெயலலிதாவினை கொன்றார் என்பது அண்ணா கழுத்தை கருணாநிதி நெறித்தார் என்பது போன்ற வதந்தி. ஜெயா இருக்கும்வரைதான் தனக்கு வாழ்வு என்பதை அறியாத பேதை அல்ல சசிகலா

ஜெயா கடைசிகாலங்களில் யாரையும் பார்க்க விரும்பவில்லை, வாழ்வாங்கு வாழ்ந்து கம்பீரமாக வலம் வந்த யாரும் கடைசி படுக்கையில் யாரையும் தன் கோலத்தை பார்க்க அனுமதிக்கமாட்டார்கள், அதுவும் வைராக்கியம் மிகுநதவர் ஒருகாலமும் மாட்டார்

ஜெயா ஒரு நடிகை, நடிகைக்கு தன் மேக் அப் அற்ற முகத்தை காட்ட தயக்கமிருக்கும் அதுவும் டை அடிக்காமல் முகச்சாயம் பூசாமல் அடையாளம் மாறிபோன முகத்தை பத்திரிகைக்கு காட்ட அவர் விரும்பவில்லை

நடிகை ஸ்ரீவித்யாவின் கடைசி கால படமே வராத பொழுது ஜெயாவின் கடைசிகால படம் வரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம்

இன்று அந்த அசாத்திய பெண்மணியின் பிறந்த‌ நாள், அதிமுகவில் 1982 நெருக்கடியில் தன்னை பாவித்துவிட்டு தூக்கி எறிய பார்க்கின்றார்கள், என் சினிமா குடும்ப வாழ்வு எல்லாம் பிடுங்கிவிட்டு தன் அரசியல் வாழ்வையும் முடிக்கபார்க்கின்றார்கள் என்ற கோபத்தில் பொங்கி எழுந்தவரே ஜெயா

நிச்சயம் அவருக்கு கொள்கையோ கோட்பாடோ இல்லை, ஏன் அந்த கட்சிக்கே இல்லை

ஆனால் கருணாநிதியிடம் இருந்து தமிழகத்தை நான் காப்பேன் என அவர் எழும்பியபொழுது மொத்த தமிழகமும் தாயே என சரண்டைந்தது

இந்த கருணாநிதி என்பவர் அரசியலை விட்டு விலகியிருந்தால் நிச்சயம் ராம்சந்தர், ஜெயா, பழனிச்சாமி சசிகலா என யாருமில்லை

கருணாநிதியினை ஒழிகின்றோம் என வந்தவர் எல்லாம் நிலைபெற்றுவிட்டனர் என்றால் எந்த அளவு அந்த மனிதருக்கு இங்கு வெறுப்பு என்பதை புரிந்துகொள்ளலாம்

ராஜாஜிக்கு பின் பார்ப்பன முதல்வர் ஆளமுடியும் என காட்டிய, எங்கெல்லாம் தன்னை அவமானபடுத்தினார்களோ ,அது சினிமா ரமாவரம், சட்டமன்றம் இன்னபிற இடங்கள் என எங்கெல்லாம் தான் விரட்டாரோ அங்கெல்லாம் ராணியாக அமர்ந்தவர் ஜெயா

எந்த ராம்சந்தரின் இறுதி ஊர்வலத்தில் அவமானபடுத்தபட்டாரோ அந்த ராம்சந்தரின் அடுத்த வாரிசு நான் என இன்று அவர் கல்லறை அருகே நிரந்தரமாக அமர்ந்துவிட்ட அந்த துணிச்சல் மிக்க போராட்டமும் சாதனையும் இன்னொரு பெண்ணுக்கு சாத்தியமில்லை

அதுவும் திமுக வெறுக்கும் பிராமண் பெண்ணாக இருந்தும் , 12 வயதிலே அரசியல் கடலை நீந்திய கருணாநிதியினை அவசரத்தில் அரசியல் கற்று எனக்கும் அதிரடி அரசியல் வரும் என நீரூபித்து ஓட அடித்த நுட்பம் அபாரமானது, நிச்சயம் அது வாழ்துக்குரியது

அந்த அசாத்திய பெண்ணுக்கு நினைவாஞ்சலிகள்

ராஜாஜிக்கு பின் காமராஜருக்கு பின் தேசபற்று கொண்ட மிக சிறந்த முதல்வராக ஜெயா இருந்தார் என்பதுதான் அவரின் ஆக சிறந்த பண்பு

போராடும் பெண்களுக்கெல்லாம் அவரே முன்மாதிரி

இந்தியாவில் பிரிட்டன் ஆட்சியினை ஏற்படுத்திய ராபர்ட் கிளைவ் தன் வரலாற்றில் எழுதுகின்றான், இந்திய வரலாற்றை புரட்டிபோட்ட போரை நான் திருச்சி மலைக்கோட்டையில் இருந்துதான் தொடங்கினேன், சாந்தாசாகிப் படைகள் திருச்சி மலைகோட்டையினை பிடிக்க அதை கைபற்ற சென்ற நான் பின் ஆற்காட்டை கைபற்றினேன்

அதிலிருந்துதான் மொத்த இந்தியாவினையும் பிடிக்கும் அளவு பிரிட்டானிய வெற்றி அமைந்தது

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் தனித்துவம் பெற்றது, பெரும் ஞானிகளும் எழுத்தாளர்களும் இன்னும் யாரெல்லாமோ அங்கிருந்துதான் வருவார்கள். எல்லா துறையிலும் தனி திருப்பத்தை அவர்கள் கொடுப்பார்கள்

அந்த காவேரியின் தீவுக்கு , காவேரியின் மொத்த பலன்களையும் சேர்த்துகொண்ட புண்ணியம் எக்காலமும் உண்டு

ஏகபட்ட பேரை சொல்லமுடியும், பெரும் உச்சம் பெற்றவர்கள் எல்லாம் அந்த மண்ணில் ஒருமுறையேனும் நடமாடியவர்களாக இருப்பார்கள் கலாம் உட்பட‌

ஜெயா அந்த ஸ்ரீரங்கத்து வாரிசு, அந்த இடத்தை நிரப்ப இன்னொரு ஸ்ரீரங்கத்துக்குகாரர் நிர்மலா ஒரு காலத்தில் நிச்சயம் வருவார்

அல்லது இன்னொரு மாபெரும் அடையாளம் அங்கிருந்துதான் உருவாகிவரும்

ஜெயாவின் இடத்தை இன்னொரு பெண் நிரப்பமுடியுமா என்றால் நிர்மலா சீத்தாராமன் அதை நிரப்பலாம் வாய்ப்பிருக்கின்றது

ஆம் ஜெயாவின் அரசியல் வாழ்வு டெல்லி எம்பியாகவே தொடங்கியது, இன்றைய நிர்மலாவின் சாயல் அது

ஜெயலலிதாவுக்கான இடத்தை இன்னொரு ஜெயலலிதா அதாவது மனவுறுதியும் அறிவும் போராட்டகுணமும், திராவிட கும்பல் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் நுட்பமும் கொண்ட இன்னனொரு பெண்ணால் மட்டும் நிரப்பலாம்

அது நிர்மலா சீத்த்தாராமனால் நிச்சயம் சாத்தியமாகும், ஆம் அதே நெருப்பு நிர்மலாவிடமும் உள்ளது

இதெல்லாம் காலம் காட்டபோகும் விஷயங்கள்

நம் கண்முன் நான் கண்ட அசாத்திய பெண்மணிக்கு, தேசபற்று மிக்க இந்து முதல்வருக்கு இன்று பிறந்தநாள், தமிழக அரசியலில் அவருக்கான அசாத்திய இடம் எக்காலமும் நிரந்தரமானது.

இங்கு நாத்திகமெல்லாம் பொய், ராம்சாமி கும்பல் வெறும் நாடக கம்பெனி. கடவுள் நம்பிக்கை கொண்டோரை எக்காலமும் இந்த மண் கைவிடாது என அடித்து நிரூபித்துகாட்டிவிட்டு சென்றவர் ஜெயா..

துணிச்சல்மிக்க பெண்கள் இங்கு உருவாகும்பொழுதெல்லாம் அதில் ஜெயா வாழ்ந்துகொண்டே இருப்பார்,

ஜெயலலிதா என்பது வெறும் பெயரல்ல, எந்நிலையிலும் பெண்களுக்கு உந்து சக்தி கொடுத்து தன்னம்பிக்கை கொடுத்து வாழசொல்லும் மந்திர சொல்.

கட்டுரை எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன்.

Exit mobile version