அப்படி இருக்கும் பொழுது செக்யூலர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நமது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குகின்றன மாநில அரசாங்கங்கள், இந்து கோயில்களை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு , அதன் சொத்துக்களை கபளீகரம் செய்து கொண்டு, பக்தர்கள் இறைவனை பார்ப்பதற்கே அநியாய வசூல் செய்து அட்டகாசம் செய்வது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இந்து அறநிலையச் சட்டம் என்பது ரத்து செய்யப்பட வேண்டும் என்பது என் போன்றோரது நீண்ட கால கோரிக்கை.
இந்துக் கோயிலில் உண்டியல் வருமானங்களையும் சொத்துக்களையும் எடுத்து ஏப்பம் விடும் மாநில அரசு, அதை மசூதிகளும் சர்ச்சைகளுக்கும் கொஞ்சிக் கொஞ்சி கொடுக்கிறது மானியமாக……
தற்போது, வெளியாகியுள்ள தகவலும் அதிர்ச்சியளிக்கிறது .அதாவது, மின் கட்டண வசூல் என்பது இந்து கோயில்களுக்கு மட்டும் பன்மடங்கு அதிகமாகவும் , மசூதிகள் சர்ச்சுகளுக்கு மிகக் குறைவாகவும் வசூலிக்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல இந்துக்களிடமிருந்து பிடுங்கும் மாநில அரசாங்கம் அதை மசூதிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் தருகிறது. பழைய மசூதிகள் மற்றும் காட்சிகளை சீர் படுத்துவதற்கு வருடம்தோறும் மானியம் அளிக்கிறது மாநில அரசு.
அது மட்டுமல்லாமல் மக்கள் அனைவரும் கொரானாவால் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட , ரம்ஜானுக்கு 5,000 டன் அளவிற்கு பச்சை அரிசியை இலவசமாக வழங்கியது. தவறான விஷயங்களுக்கு அதிக வரி போடுவதும் , ஊக்குவிக்க வேண்டிய விஷயங்களுக்கு வரிச் சலுகைகள் ,மானியங்கள் அளிப்பது ஒரு அரசின் கொள்கையாக இருப்பது ஆச்சரியமல்ல. ஆனால் இந்துவாக இருப்பதற்கு அதிக வசூலையும் கிறிஸ்தவராக இஸ்லாமியராக இருப்பதற்கு வரிச் சலுகைகளும் வழங்கப்படுவது என்பது “நீ இந்துவாக இருக்க கூடாது மதம் மாறி விடு” என்று வலியுறுத்துவதை போன்று ஆகிவிடாதா?!
இது நீண்ட நாளாக பேசாப் பொருளாக இருந்து வருகிறது. ” இந்து அறநிலைய சட்டம் ” ரத்து செய்யப்பட வேண்டும். இதுதான் எல்லாவற்றுக்கும் தீர்வாக அமையும். அதுபோன்று மசூதி களுக்கும் சர்ச்சைகளுக்கும் இதுபோன்ற தேவையற்ற சலுகைகளை வழங்குவதை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் உண்மையான மதச்சார்பற்ற அரசாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.