சசிகலாவின் விடுதலை தேதி அறிவித்த சிறை நிர்வாகம்! என்ன நடக்கும் தமிழக அரசியலில்!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் இரும்பு மங்கையாக திழந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயா, அவர் இன்னும் பெரும் உச்சங்களை அடைந்திருக்கலாம் கொடும் விதி அவருக்கு இரு உருவில் வந்தது ஒன்று அவருக்கான குடும்பம் அமையாமல் அவர் தனியாகவே வாழ்ந்தது இன்னொன்று சசிகலா குடும்பம்

நுனிநாக்கு ஆங்கிலமும் மேல்மட்ட வாழ்வுமாக வலம் வந்த ஜெயாவுக்கும் 5ம் வகுப்பினை தாண்டா பட்டிக்காட்டு சசிகலாவுக்குமான நட்பு இன்றுவரை ஆச்சரியமே என்னமோ தெரியவில்லை துரியனிடம் மாட்டிய கர்ணனாக அவர்களிடம் அடங்கி கிடந்தார், அதில் சில நியாயமான நன்றிகடன் பக்கங்களும் இருந்தன‌

ஆம் ஜெயாவினை ஆட்சிக்கு வரகூடாது என முதலில் விரட்ட நினைத்தவர் ராம்சந்தர், அதன் பின் ஜாணகி அணி என ஏராளம்ஒரு கட்டத்தில் ஜெயாவே அரசியலை விட்டு விலக தயாராக இருந்தார்ஆனால் யானை தன்பலம் அறியாது என்பதை போல அவர் பலத்தை அறிய வைத்தவன் நடராசனும் சசிகலாவும். ஜெயா முதல்வராக வேண்டும் என ஆசைபட்ட ஒரே குடும்பம் சசிகலா குடும்பம்நிச்சயம் அவரை பாதுகாத்து முதலமைச்சர் ஆக்கியது அவர்களே, அதனால்தான் துரியனுக்கு கர்ணன் போல அவரால் அவர்களை விட்டுகொடுக்க முடியவில்லை அவர்கள் யாராயினும் தன் நம்பிக்கைகுரியவர்கள் தன் நலம் விரும்பிகள் என கண்டார்.

சொந்தமும் ராம்சந்தரும் இன்னும் பலரும் தன்னை ஏமாற்றிய உலகில், தன்னை பயன்படுத்தி தூர எறிந்தவர்களையே பார்த்த உலகில், சசிகலா என்பவர் தனக்காக தன்னை முதலைச்சமாராக படும் பாடுகளை கண்ட பொழுது அவர் மனம் இரங்கியது அந்த இரக்கம் கடைசி காலம் வரை இருந்தது

ஜெயாவின் சாவில் மர்மம் இருப்பதாக நாம் கருதவில்லை, ஜெயா மகாராணியாக இருந்தாலும் மானிட குணங்களின் பலவீனம் அவருக்கும் இருந்தது, 60 வயதில் வரும் மனகுழப்பம் இருந்தது வழக்குகள் அவரை பயமுறுத்தின‌ ஒருமாதிரியான ஜெயாவினை கட்டுபடுத்த யாருமில்லை, சொன்னால் கேட்கும் ரகமல்ல ஜெயா உணவு முதல் எல்லாம் அவர் விருப்படி இருந்தது அது உடல் நிலையினை பாதித்தது

கடைசி காலங்களில் நடக்க தடுமாறினார், வீடியோ கான்பரன்சிங் ஒன்றில் மட்டும் தோன்றினார் உடல்நிலையினை விட வழக்கு அவரை பயமுறுத்தியது, தப்ப ஒரே வழி தான் பிரதமராவது என உணர்ந்தார், உச்சபட்சமாக 39 எம்பிக்களை பெற்று பலமானார்ஆனால் விதி மோடிவடிவில் வந்ததில் மனதால் உடைந்தார் ஜெயா ஆனாலும் உடன் ஆபத்து இல்லைஎனினும் இனி வழக்குகள் தன் கையினை கட்டிபோடும் என அஞ்சினார், பாஜகவின் முகங்கள் அவர் மட்டுமே அறிந்தது என்பதும் அந்த சித்தாந்தம் இனி என்னவெல்லாம் செய்யும் என்பதெல்லாம் அவர் மனகண்முன் ஓடியது

பாம்பின் கால் பாம்பறியும் என்பது அதுதான், இதனால் குழம்பி தவித்த ஜெயா உடல் நலிவுற்றார் அப்படியே அப்பல்லோவில் போராடி இறந்தார்அங்கு மர்மம் ஒன்றும் அல்ல, சசிகலா ஜெயலலிதாவினை கொன்றார் என்பது அண்ணா கழுத்தை கருணாநிதி நெறித்தார் என்பது போன்ற வதந்தி. ஜெயா இருக்கும்வரைதான் தனக்கு வாழ்வு என்பதை அறியாத பேதை அல்ல சசிகலா

இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா, அடுத்தாண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை செய்யப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை 2017ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா அபராதத்தை செலுத்தவில்லை என்பதால், அவரின் விடுதலை தாமதமாகும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், சசிகலாவின் விடுதலை குறித்து கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த சிறை நிர்வாகம், சசிகலா வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாவதாக தெரிவித்துள்ளது. மேலும், அபராதத்தொகை ரூ.10 கோடியை அவர் செலுத்தாத பட்சத்தில் 2022ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி தான் விடுதலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பரோல் விதியை பயன்படுத்தினால் சசிகலா விடுதலை தேதி மாறுபடவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் அவர் சிறை நிர்வாகத்தை மீறி வெளியே சென்று வந்துள்ளார், அதற்க்கான ஆதரங்கள் வீடியோ காட்சிகள் வெளிவந்துள்ளது அதை வைத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு தேர்தல் முடிந்த பிறகு சிறையிலிருந்து வெளியே வரலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றது. தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை அதிமுக பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது எனவே ஏன் சசிகலாவை கொண்டு வந்து மீண்டும் தமிழகத்தில் அரசியல் சிக்கலை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.

Exit mobile version