2006-2011 ல் சென்னை உட்கட்டமைப்புக்கு வழங்கபட்ட 13,000 கோடி எங்கே? தி.மு.கவை சம்பவம் செய்த ஷியாம் கிருஷ்ணசாமி!

சென்னையில் கடந்த மூன்று நாட்களாக கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதன் காரணமாக சென்னை வெள்ள காடாக மாறியது. முக்கியாமான இடங்களில் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மின்சாரம் இல்லாமலும் உணவு இல்லாமலும் மக்கள் பல இன்னல்களை சந்தித்தனர்.

மழை வெள்ளத்திற்கு காரணம் ஏரிகள் இருந்த இடம் குடியிருப்புகளாக மாறியது தான். மேலும் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யாமல் அலட்சியமாக இருந்தது மட்டுமின்றி மழை எச்சரிக்கை வந்த பின்பும் அரசு அதிகாரிகளை இடம் மாற்றியது தமிழக அரசு. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி தமிழக அரசிற்கு பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இந்த வெள்ள காலத்திலும் மக்களின் துயர் துடைக்க செயல்படாமல் வெறும் விளம்பரத்தில் ஈடுபடுவது உகந்தது அல்ல. அருவருப்பை உண்டாக்கும் விளம்பர மோகத்தை விட்டுவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து மக்களின் துயர் துடைக்கு நீங்களும் உங்கள் சாகாக்களும் அரசு இயந்திரங்களையும் ஈடுபடுத்துங்கள்.

சென்னையில் மழையின் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உலகிற்கே தெரியும்! முதல்வர் வீதி வீதியாக ஆய்வு செய்து தெரிய வேண்டும் என்பதில்லை.இது திமுகவின் விளம்பரம் மோகத்திற்கும், வரவுள்ள மாநகராட்சி தேர்தலுக்கு போட்டோ காட்டுவதற்கும் உதவுமே தவிர தத்தளிக்கும் மக்களுக்கு உதவாது.

சென்னையின் கட்டமைப்பு வசதிகளைச் சர்வதேச அளவிற்கு உயர்த்த, 2006-2011 மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஆட்சியிலிருந்தபோது 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அதன் மூலம் அன்றைய திமுக அரசு எந்தந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன? என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.அதேபோல 2011-க்கு பிறகு 2021 வரை ’ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான கோடி நிதியை எடப்பாடி அரசு என்ன செய்தது? என்பதும் தெரியவில்லை.

Exit mobile version