மேற்குலகில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின், ட்ரம்ப் மற்றும் பைடன் இடையே சமரசம் செய்த அந்த கிழக்கு உலக தலைவர் யார்?

ஜோபைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருந்த சிக்கல் எப்படி சரி செய்யப்பட்டது?.
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் ஒரு கட்டத்தில் இருவரும் சம பலத்துடன் இருந்த சமயத்தில் தபால் ஓட்டுகள் முடிவுகள் தேர்தல் முடிவுகளை மாற்றியது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கும், இதுவரை எந்த அதிபருக்கும் கிடைக்காத வாக்குகள் இந்த முறை டொனால்ட் ட்ரம்ப்க்கு கிடைத்தது., அதாவது 71 மில்லியன் மக்கள் வாக்களித்து இருந்தனர், அத்துடன் இந்த தேர்தலில் சுமார் 47% அளவிற்கு வாக்குகளை பெற்று இருந்தார். ஆனாலும் ஜோபைடன் எண்ணிக்கையில் முந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ட்ரம்ப் தனது தேர்தல் முடிவுகள் ஏற்கப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்து தேர்தலில் முறைகேடு நடந்து தனது வெற்றி பறிக்கப்பட்டது என்றார். இதற்காக அந்தந்த மாகாண நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகளையும் செய்தார். இது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. மேலும் தனது வெற்றி நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் உறுதி செய்யப்பட்டு தானே அமெரிக்க ஜனாதிபதியாக தொடரப் போவதாக அறிவித்ததது மேலும் சிக்கலை அதிகரித்து.

உலகின் மிக பழமையான ஜனநாயக நாட்டின் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட சமயத்தில் இது போன்ற தொரு சிக்கல் இது வரை ஏற்பட்டதில்லை என்பதால் பல இடங்களில் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
சுமூகமாக இதனை தீர்க்க பல்வேறு விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
தபால் ஓட்டுகளில் இறந்தவர்களின் பெயரில் எல்லாம் வாக்குகள் செலுத்த பட்டு மோசடி நடைபெற்றது என்று ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.

ஆனால் அவற்றை எல்லாம் நீக்கிவிட்டோ அல்லது மீண்டும் தேர்தல் நடத்துவதோ நடைமுறை சாத்தியம் இல்லை என்பதும், ஜனவரி மாதம் 20 ஆம் தேதி புதிய அதிபராக ஒருவர் பொறுப்பேற்க வேண்டிய சட்ட நிர்ப்பந்தம் குறித்தும் விவாதிக்கபட்டது. ட்ரம்ப்பின் மனைவி மற்றும் மகன்கள் இந்த தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக் கொள்ளச் செய்ய பிரம்ம பிரயத்தனங்கள் செய்து பார்த்து விட்டனர். ட்ரம்ப்பின் மனைவி மெலினா விவாகரத்து செய்யப்போவதாக செய்தி காட்டு தீயாக பரவியது இந்த சமயத்தில் தான். மனிதர் அசரவில்லை…..

தாம் அமெரிக்காவின் அடுத்த 6ஆண்டுகளுக்கு தேவையான அனைத்தும் செய்து வைத்துள்ளதாகவும், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற கொள்கையில் பிடிவாதமான பற்றுக் கொண்டு இருப்பதாக பேசியிருக்கிறார்.

அமெரிக்க செனட்டர் மற்றும் முக்கியஸ்தர்கள் தலையை பிடித்து கொண்டனர். வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறும் சூழ் நிலை வந்ததால் அது உடனடியாக தீர்க்க சாத்தியம் இல்லை, காரணம் கடந்த முறை டொனால்ட் ட்ரம்ப் ஜெயித்தது குறித்த வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்படி இருக்க புதியதாக ஒருவர் பதவி ஏற்க முடியாது போகலாம் என்று சட்டச் சிக்கல் குறித்தும் பேசப்பட்டு இருக்கிறது.

இந்த இடத்தில் தான் உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு
என்பதற்கு ஏற்ப இந்திய தரப்பில் இருந்து ஆலோசனை ஒன்று ட்ரம்ப்பிடம் தெரிவிக்க பட்டது. அவரும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதையும், நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரின் செயல்பாடுகள் இதனை வெளிப்படுத்தியதை கண்டு பலரும் புருவத்தை உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தனர்.
விஷயம் இது தான்.

அமெரிக்காவின் சட்ட படி ஒருவர் ஜனாதிபதியாக இரண்டு முறை அல்லது எட்டு ஆண்டுகள் அப்பதவியில் இருக்க முடியும். அந்த வகையில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு முறை மாத்திரமே, அதாவது நான்கு ஆண்டுகள் மாத்திரமே அந்த பதவியிலிருந்துள்ள தற்போதைய சூழ்நிலையில் மீண்டும் அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்றும், அதிபராக நீங்கள் பொறுப்பு வகித்த காலத்தில் நீங்கள் சொல்வது போல் இன்னும் 6 ஆண்டுகளுக்கு தேவையானவற்றை செய்து வைத்திருப்பது உண்மை என்றால் அதனை தாண்டி தற்போது அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோபைடனால் அதனை விஞ்சி சாதிக்க முடியாது.

மேலும் கொரானா நோய் தோற்று காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை மீண்டும் கட்டமைக்க எப்படியும் இரண்டு ஆண்டுகளாவது பிடிக்கும். அதேசமயம் தேர்தல் சமயத்தில் உங்கள் நிர்வாகத்தை விமர்சனம் செய்து தான் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். அப்படி இருக்க நீங்கள் சொல்வது சரி என்றால் அவரால் இதனை விஞ்சிய நிர்வாக திறனை வெளிப்படுத்த வேண்டும்.அதனை அவரால் வெளிப்படுத்தாமல் போனால் அடுத்த முறை நடைபெறும் தேர்தலில் நீங்கள் இலகுவாக வெற்றி பெறுவதோடு இன்னமும் வீரியமாக செயல்பட முடியும் அல்லவா என கேட்கப்பட்டது. பின்னர் இதில் உள்ள விஷயங்களின் சாதகங்களை உணர்ந்த ட்ரம்ப் மனமாற்றம் அடைந்ததாக தெரிகிறது என்கிறது அவரது அரசியல் வட்டாரம்.

இஃது மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஜோபைடன் ஆட்சி காலத்தில் அவர் ஓட்டமாக ஓட வேண்டி வரும் என்கிறார்கள். தற்போது மேல் பார்வைக்கு சீன எதிர்ப்பு என்பது இல்லாமல் நிஜத்தில், செயல்பாடுகளில் பல்வேறு விஷயங்களை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. கண் கொத்திப் பாம்பாக இனிவரும் காலங்களில் ட்ரம்ப் இருந்து வர போகிறார் என்கிறது அமெரிக்க அரசியல் வட்டாரம்.

நோய் தோற்று முன் வரை உள்ள காலத்தில் அமெரிக்க வர்த்தகத்தில் சீனா வின் பங்கு 12.4% என்கிறார்கள், இதில் இந்தியாவின் பங்கு .87% மட்டுமே. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் சீன நிறுவனங்களை பலவற்றை கொரானாவிற்கு பின்னரான காலத்தில் தடைச் செய்யும் நோக்கில் திட்டமிட்டு காய் நகர்த்தி சட்டம் இயற்றியுள்ளார். இதனை ஜோபைடன் காலத்தில் நடைமுறை படுத்த வேண்டும் அல்லது சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதில் அவரது நிர்வாகம் எதனை தேர்ந்தெடுக்க போகிறது என்பதை பொறுத்து அரசியல் களம் மாறலாம்.

ஆனால்…..
ஜோபைடன் தெளிவாக ஒன்றை சொல்லி இருக்கிறார், ட்ரம்ப் காலத்தில் தடை செய்தார்களே ஒழிய இதற்கு மாற்று என ஒன்றை சொல்ல வில்லை. ஆனால் தனது நிர்வாகம் இதற்கு மாற்றாக இந்தியாவை தேர்வு செய்து உள்ளதாக அறிவித்தார். மேலும் ட்ரம்ப் கால நிர்வாகத்தை காட்டிலும் தனது காலத்தில் தனது நிர்வாகம் இந்தியாவுடனான இறுக்கமான உறவினை கொண்டிருக்கும் என்கிறார் அவர்.
இஃது வெகு நிச்சயமாக மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தும்,பற்பல விதங்களில் பல்வேறு விதமான வர்த்தக நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் இந்தியாவில் ஏற்படும் மிக நல்லதோர் சூழல் உருவாகி உள்ளது.

நமக்கு அமெரிக்காவில் தற்போது உள்ள 0.87% இருந்து சீனாவின் வசம் இருந்த 12.4% அளவிலான வர்த்தக இடைவெளியை நிரப்பினாலேயே மிகப்பெரிய அளவில் இந்தியா வளர்ச்சி காணும் என்பதை கண்கூடாக காணலாம். மிகப்பெரிய அளவிலான தளம் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்.நம்மிடம் உலகின் மிக பெரிய அளவில் இளைஞர் பட்டாளம் ஒன்று உள்ளது. கொரானா காலத்தில் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரே நேர்கோட்டில் ஒன்று போல் வந்து நிற்கிறது.

இனி அவரவர் சொந்த பலத்தில் ஓடி ஜெயிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதில் இளைஞர் பட்டாளத்துடன் இந்தியா முன்னணியில் உள்ளது. நம்மை காட்டிலும் சற்றே கூடுதலான எண்ணிக்கையில் உள்ள சீனர்களுக்கு இந்த போட்டியில் கலந்து கொள்ள தடை உள்ளது, அப்படி என்றால்……?? வெல்லப்போவது யார்????இனி உலகை ஆளப்போவது யார்????யாருக்கும் பங்கம் இல்லாமல், அதேசமயம் மிகுந்த அளவில் நன்மை பயக்கும் இவ்வாறான ஆலோசனை சொன்னவர் யாராக இருக்கக்கூடும் என்பதை நீங்கள் யூகித்து இருந்தால் நீங்களும் சாணக்கியர் தேசத்தவரே…….

Exit mobile version