2021 இந்திய குடியரசு தினத்தில் தலைமை விருந்தினர் யார் தெரியுமா ?

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று புதுடெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துக் கொண்கிறார். 2021 ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியாவின் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அரசின் சார்பில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் டொமினிக் ராப் (Dominic Raab) தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனின் சார்பில் இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கலந்துக் கொள்கிறார். இதற்கு முன்னதாக பிரிட்டன் பிரதமர் ஜான் மேஜர் (John Major) 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசு தின அணிவகுப்பில் முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டார். 

கடந்த மாதம் நவம்பர் 27 அன்றுபிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமரை (Boris Johnson) தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரிடையாக அழைப்பு விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அடுத்த ஆண்டு பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி 7 உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரிட்டன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பானது மிகவும் முக்கியமாக ஒன்றாக பார்க்கப்படுகிறது தற்போது உலக அளவில் நடைபெறும் பல மாற்றங்களில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இந்த சந்திப்பால் இந்தியா மற்றும் பிரிட்டனின் இடையே உள்ள உறவு மென்மேலும் வளர வாய்ப்பாக அமைந்துள்ளது

Exit mobile version