கொரோனவை பற்றி சிந்தியுங்கள்! பிரதமர் சொன்னதை செய்யுங்கள்! எதற்காக 21 நாட்கள் ஊரடங்கு !

இத்தாலியும் அப்டேட் செய்து விட்டது இன்று மட்டும் இத்தாலியில் 5249 புதிய கொரானாநோயாளிகள் உருவாகி இருக்கிறார்கள். இன்று மட்டும் 743 பேர் இறந்து இருக்கிறார்கள்.இன்று அமெரிக்கா வில் 5860 பேர் புதியநோயாளிகள் உருவாகி இருக்கிறார்கள். 69
பேர் இன்று மட்டும் அமெரிக்காவில் கொரா னாவினால் இறந்துள்ளார்கள்.

ஸ்பெயினில் 4540 பேருக்கு புதியதாக கொ ரானா தாக்கியுள்ளது.480 பேர் இன்று மட்டும் ஸ்பெயினில் இறந்துள்ளார்கள் ஜெர்மனி யில் இன்று மட்டும் 2935 பேருக்கு கொரானாவினால் பாதிப்பு உருவாகி உள்ளது.

வளர்ந்த நாடுகளிலேயே இப்படி இருக்கும் பொழுது இந்தியா என்னவாகும் என்று மோடி யோசித்து 3 வாரத்திற்கு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி மக்களை கொரானாவிடம் இருந்து காப்பாற்ற அவர்களை வீட்டிலே யே முடங்க வைத்து விட்டார்.

ஓரு குடும்ப தலைவன் தன்னுடைய மகன் அல்லது மகள் அல்லது மனைவி வேலை பா ர்க்கும் இடத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் வேலை பார்த்தது போதும் வீட்டுக்கு வந்து சும்மா இருங்கள் மற்றதை அப்புறம் பார்த்து கொள்வோம் என்று கூறினால் அவர் தான் உண்மையான குடும்ப தலைவர்.

அதை விட்டு விட்டு வீட்டு லோன் கட்டனும் வண்டி லோன் கட்டணும் தங்கச்சி கல்யாணத்துக்கு நகை சேர்க்கனும் உன்னை படிக்க வைத்த கடனை அடைக்கனும் என்று சொன்னால் அவரை யாராவது குடும்ப தலைவராக நினைப்பார்களா? குடும்ப உறுப்பினர்கள் கூட நினைக்க மாட்டார்கள்.

உலகில் உள்ள வலிமையான நாடுகளே கொ ரானா நடத்தும் கோர தாண்டவத்தில் சிக்கி சிதறி கிடக்கும் பொழுது 130 கோடி மக்கள் தொகையுடன் போதிய அளவு மருத்துவ வசதி இல்லாத இந்தியாவை மேற்கு நாடுகளில் உள்ளது மாதிரி கொரானா தாக்கினால் என்ன செய்ய முடியும்?

ஒரு குடும்ப தலைவன் பணத்தை விட தங்க ளின் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலத்தையே உயர்வாக கருதுவார்கள்.ஒரு சிறந்த ஆட்சியாளர் தன் நாட்டு மக்களின் உயிரை காப்பதே தன்னுடைய முதல் கடுமையாக நினைக்க வேண்டும்.

மோடி அதைத்தான் நினைக்கிறார் அதையே செய்கிறார்… மக்களே தனித்துருங்கள் விழித்திருங்கள் கொரோனவை விரட்டுங்கள் !

Exit mobile version