சீக்கிய மதத்திலிருந்து இஸ்லாமிற்க்கு மதம் மாற கட்டாயப்படுத்திய மனைவி! புகார் அளித்த கணவன்!

இந்திய யூனியன் பிரதேசமான சண்டிகர் மாநிலத்தை சேர்ந்தவர் நீதிமன்றத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் .அந்த புகாரில் அவரது மனைவி மற்றும் அவரின் குடும்பத்தார் மீது குற்றம் சாட்டியுள்ளார். தன்னை சிக்கிய மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற வற்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
சண்டிகர் நீதிமன்றத்தில் சீக்கியர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில்: நான் யூனியன் பிரேதேசம் சண்டிகரில் 2008 ஆம் ஆண்டு ஒரு நகைக் கடையில் மேலாளராக பணி புரிந்தேன்.

அந்த சமயத்தில் நான் வேலை பார்த்த கடையில் என்னுடன் பணிபுரிந்த பெண்ணு காதல் ஏற்பட்டது. அந்த பெண் முஸ்லிம் என்பதால் திருமணத்துக்கு மறுத்தேன். அந்த பெண்ணோ கல்யாணத்திற்கு பின் உங்களின் மத நம்பிக்கையில் ஒரு போதும் குறுக்கிடமாட்டேன் என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.ஆனால் திருமணமான நாளில் இருந்தே மனைவியும் அவரது பெற்றோரும் என்னை முஸ்லிமாக மதம் மாற கட்டாயப்படுத்தி வருகின்றனர். நான் அதை மறுத்து வந்தேன். கடந்த 2012 ஆம் ஆண்டு எனக்கு மகன் பிறந்தான். அவனை சீக்கியராக வளர்க்க நான் விரும்புகிறேன். ஆனால் எனது மனைவி அவரது குடும்பத்தார் மகனையும் மதம் மாற்ற கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் எனக்கும் என் மனைவிக்கும் தினமும் பிரச்சனை ஏற்படுகிறது. மதம் மாற மறுப்பதால் என்னை என் மாமனார் மாமியார் மிகவும் அவமானப்படுத்துகின்றனர்.என்னை கட்டாயமாக மதம் மாற்ற முயற்சிக்கும் மனைவி மாமனார் மாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ரஸ்வீன் கவுர் இது தொடர்பாக மனுதாரரின் மனைவி மாமனார் மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version