கொங்குநாடு பத்த வச்சுட்டியே பரட்டை ! தி.மு.கவிற்கு ஆட்டம் காட்டுமா பா.ஜ.க! பாஜகவின் மாஸ்டர் பிளான்!

தி.மு.க பதவியேற்ற சமயத்தில் கோவை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆக்ஸிஜன், தடுப்பூசி பற்றாக்குறை பற்றி தொலைக்காட்சிகளில் விவாதம் நடைபெற்ற பொழுது திமுகவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி கான்ஸ்டன்டைன் என்பவர் பேச்சுதான் கோவை மக்களை கோபமூட்டியது. அவர் பேசியது உங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுபாடு என்றால் மோடியிடம்கேளுங்கள் என்று அவர் பேசியது அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது. திமுகவுக்கு வாக்களிக்காததால் நாம் அந்நியச் படுத்தப்படுகிறோமோ என்று எண்ணம் அங்குள்ள மக்களிடம் ஏற்பட்டது.

தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு உருவாக வேண்டும் என சமூக வலைதளப் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் கொங்குதேர் வாழ்க்கை என்ற சங்கப் பாடலை குறித்து பதிவிட்டிருந்தார்.அது மேலும் கொங்கு நாடு என்ற கோரிக்கையை மேலோங்கியது மேலும் வானதி சீனிவாசன் அவர்கள் கொங்கு மாநிலத்திற்கு ஆதரவு அளித்தார். இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் இனி திமுக VS பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. வானதி அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற தருணத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கொங்கு நாடு என குறிப்பிட்டது தற்போது வைரலாகி வருகிறது.

இதை அனைதையும் உளவுத்துறை மூலம் உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக கோவை சென்று அங்குள்ள வீபரீத நிலையை உணர்ந்த முதல்வர் இங்கு எங்களுக்கு வாக்களிக்காத வாக்காளர்கள் ஏன்தான் திமுகவுக்கு வாக்களிக்காமல் இருநதோமோ என்று எண்ணுகின்ற அளவில் எங்கள் ஆட்சி இருக்கும் என்று பேசினார்.

மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. இது மத்திய அரசால் பிரிவினை பேச்சாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆளூநர் தனது உரை முடிவில் ஜெய்ஹிந்த் என்று கூறாமல் பேச்சை முடித்து இருக்கிறார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஜெய்ஹிந்த்தை கொச்சைப் படுத்தி பேசியுள்ளார். இதற்கு முதல்வர் தரப்பில் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை

மத்திய அமைச்சராக பதவியேற்ற முருகன் அவர்கள் கொங்குநாடு என்று குறிப்பிட்டதும் சாதாரண நிகழ்வுகள் அல்ல. எல்லாமே அங்குள்ள மக்களின் உணர்வுகளை கொண்டே கொங்குநாடு என்று குறிப்பிட்டுள்ளார்கள். தெலுங்கானா பிரச்சனை கூட முதன்முதலில் அங்கு பாஜக வால் உருவாக்கப்பட்டது பிறகு அதை சந்திரசேகர ராவ் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு பிறகு தெலுங்கானா உருவாகியது. வருங்காலத்தில் கொங்குநாடு பிரச்சனை நிச்சயம் முடிவுக்கும் வரும் என்று தெரியவில்லை. இதை விதைக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் நினைக்கிறார்கள். கொங்கு நாடு குறித்து பாஜக வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தனி மாநிலம் கோரிக்கையை முன்வைத்துள்ளர்கள். மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நைனார் நாகேந்திரன் அவர்களும் கொங்கு நாட்டிற்கு ஆதரவாக பேசியுள்ளார். மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை என குறிப்பிட்டுள்ளார். இனி திமுகவுக்கும் பாஜகவுக்கும் நேரடி போட்டி தான் என்கின்றார்கள் அரசியல் வல்லுநர்கள்

Exit mobile version