தலைநிமிரும் இந்தியா தலைமகனால்! உலகத் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்! வெளிவந்த ஆய்வு முடிவு!

உலகத் தலைவர்களின் திறமையை மதிப்பீடு செய்து வெளியிடும் அமெரிக்கன் டேட்டா இண்டெலிஜென்ஸ் நிறுவனமானமார்னிங் கன்சல்ட் கடந்த 17-06-2021 அன்று வெளியிட்டுள்ளகணிப்புகள் படி உலகத் தலைவர்களில் திறமையானவராக மோடி 66% ஆதரவுடன் முதல் இடத்தில் இருந்தார்.

தற்போது அதே போல் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகாரம் பெற்ற தலைவர்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது இந்த ஆய்வில்ஜோ பைடன், போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட தலைவர்களை பின்னுக்குத் தள்ளி, பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

மேலும் இந்தியாவை வழிநடத்தும் விதம் நரேந்திர மோடியின் உலக நாடுகளுடன் உள்ள நட்பு இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றை வைத்து நடத்திய ஆய்வின் அடிப்படையில் பிரதமர்நரேந்திர மோடி முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து உலக அளவில் எடுக்கப்படும் ஆய்வுகளிலும் சரி இந்திய அளவில் எடுக்கப்படும் ஆய்வுகளும் சரி பிரதமர் மோடி அவர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

இந்தியா முழுவதும் 100கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியது பலஏழை நாடுகளுக்கு கொரோன தடுப்பூசி இலவசமாக வழங்கியது உலக நாடுகள் மத்தியில் மோடியின் புகழ் உச்சத்தை அடைந்துள்ளது. உலகத்தின் மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொரானாவை கட்டுப்படுத்தி பொருளாதாரத்தை மீட்டது போன்று பல்வேறு நடவடிக்கைகள் மக்கள் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் மிகப்பெரும் பிரதமர் நரேந்திர மோடியை தலைநிமிர செய்தது.

இதன் மூலம்பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 70 சதவீத ஸ்கோர் அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஆப்ரேடரும் மூன்றாவது இடத்தில் இத்தாலி பிரதமர் மாரியோ டிராகியும் உள்ளனர்.மோடியைப் பொறுத்தவரை 24 சதவீதத்தினர் தான் அவரை நிராகரிக்கின்றனர். 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏற்கின்றனர். ஜோ பைடனுக்கு 44 சதவீதத்தினர் ஆதரவுதான் உள்ளது. 48 சதவீதத்தினர் அவரை எதிர்க்கின்றனர்

Exit mobile version