2013-ல் போதைப்பொருள் கடத்தலில் கைதானவர் ஜாபர் சாதிக்..அண்ணாமலை கூறிய அதிர்ச்சி தகவல்! ஆதாரமும் உள்ளது!

jaffer sadiq dmk

jaffer sadiq dmk

டெல்லியில் கடந்த வாரம் போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்றது. இந்த அதிரடி சோதனையில் இரண்டு போதைப் பொருள் குடோனை கண்டறிந்து சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் இதன் மதிப்பு சுமார் 2000 கோடி ஆகும்.

இந்த சோதனையில் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தான் இந்த போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டு வந்துள்ளான், தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்த போதை பொருள் கடத்தலில் அவர் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜாபர் சாதிக்கின் 8 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஜாபர் சாதிக்கின் வீட்டு பூட்டை உடைத்து அங்கிருந்த ஆவணங்களை பறிமுதல் செய்த போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீட்டுக்கு சீல் வைத்த நிலையில் தற்போது வங்கிக்கணக்குகளை முடக்கியுள்ளனர்.

இந்த நிலையில் 2013-ம் ஆண்டு இதேபோல போதை மருந்து கடத்திய வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. மேலும் இது குறித்து கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

“2013-ம் ஆண்டு இதேபோல போதை மருந்து கடத்திய வழக்கிலும் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அன்றைக்கு பிடிபட்டது வெறும் 20 கிலோ. 11 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு 3,500 கிலோ போதை மருந்து கடத்தும் இன்டர்நேஷனல் கிரிமினலாக உருவாகியுள்ளார்.அன்றைக்கு பிடிபட்டது வெறும் 20 கிலோ. 11 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு 3,500 கிலோ போதை மருந்து கடத்தும் இன்டர்நேஷனல் கிரிமினலாக உருவாகியுள்ளார்” வெளியில் வந்தவரை காவல்துறை முறையாக கண்காணிக்கவில்லை.

டிஜிபியிடம் அவார்டு வாங்குவது, முதல்வர், உதயநிதி அன்பில் மகேஷ் ஆகியோருடன் புகைப்படம் எடுப்பது, சினிமா துறையில் கம்பெனி நடத்துவது என்று வேறு பிம்பத்தை கட்டமைத்துவிட்டார். மேலும் இந்த தகவல் குறித்து காவல்துறை என்னிடம் கேட்டல் 2013-ம் ஆண்டு இதேபோல போதை மருந்து கடத்திய வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அளிப்பேன் என கூறினார்.

மேலும் சீமான் சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை : அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் அந்த சின்னம் அவருக்காக காத்திருக்கும். அவர் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை. சீமானுக்கு ஒரு சின்னம் வேண்டுமென்றால் அவர் விண்ணப்பிக்க வேண்டும். சென்னை வெள்ளத்தால் விண்ணப்பிக்க மறந்துவிட்டேன் என்கிறார். அண்ணாமலையா அவர் வீட்டுக்கு சென்று கையைப்பிடித்து விண்ணப்பிக்க வேண்டாம் என்று சொன்னது.

யார் முதலில் செல்கிறார்களோ அவர்களுக்குத்தான் சின்னம் கிடைக்கும். அதைத்தான் டெல்லி உயர் நீதிமன்றமும் சொல்லியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன தகுதி வேண்டும் என சீமானுக்கு தெரியுமா. இதை எல்லாம் புரிந்துகொள்ளாமல் சீமான் என் மீது பழிபோடுகிறார். அவர் உண்மையை தெரிந்துகொண்டு பேசவேண்டும். என கூறினார்

Exit mobile version