144 கோடி ரூபாயை சுருட்டிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள்.. பற்ற வைத்த ஸ்ம்ரிதி இராணி-பதறும் எதிர்க்கட்சிகள்!

Smriti Irani

Smriti Irani

மத்திய அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உதவி தொகையை சுருட்டிய விவகாரம் தற்போது பரப்பினை கிளப்பியுள்ளது.

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு 2007ல் இருந்து உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 144 கோடி ரூபாயை, சுருட்டிவிட்டன என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரும் புயலை கிளப்பியுள்ளது.

இந்தியா முழுதும் உள்ள 1.80 லட்சம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 53 சதவீத கல்வி நிறுவனங்கள் போலியானவை; இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களே இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள், மாணவர்களுக்கான பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளன.

போலி ஆதார் அட்டைகள் மற்றும் கேஒய்சி ஆவணங்களுடன், பயனாளிகளுக்கு போலி வங்கிக் கணக்குகளைத் திறக்க வங்கிகள் எவ்வாறு அனுமதித்தன. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில், பல கல்வி நிறுவனங்கள் போலியானவை அல்லது செயல்படாதவை என்று கண்டறியப்பட்டிருக்கிறது”

இதில், சிறுபான்மையினரை வைத்து அரசியல் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தான் பெரும் ஊழல் நடந்துள்ளதாம். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் ஆதரவு இல்லாமல் இந்த அளவிற்கு ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், தற்போது எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.

தமிழகத்திலும் இப்படி பல சிறுபான்மை நிறுவனங்கள் ஊழல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சி.பி.ஐ., விசாரணை, ‘இந்தியா’ கூட்டணிக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Exit mobile version