ஆம்பூரை அடுத்து சென்னை மசூதியில் மறைந்திருந்த 16 பேர் !

தமிழகத்தில் இதுவரை 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்கள் . இந்த நிலையில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் சுமார் 60% நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லமால் ஆம்புர் மசூதியில் இருந்து வெளிநாட்டினர் சிலர் மறைந்திருந்தார்கள் இந்த சூழ்நிலையில் சென்னையின் முக்கிய நகரமான பழைய பல்லாவரம் பகுதி மசூதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக அந்த பகுதி காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல் துறை பழைய பல்லாவரம் கவிதாபண்ணை அருகில் அமைந்துள்ள மசூதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர் . அப்போது அங்கிருந்த 16 நபர்களை நேற்று போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

மசூதியில் தங்கி இருந்த 16 பேரை பற்றி போலீசார் மசோதி அருகில் உள்ள அந்த பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்ட போது ,மசூதியில் தங்க வைக்கப்பட்ட நபர்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரிவித்தார்கள் அங்கு தங்கியிருந்தவர்களுக்கு தமிழ் தெரியது எதற்காக இங்கு வந்தார்கள் எதற்காக இங்கு தங்க வைக்கப்பட்டார்கள் என்பது மர்மமாக உள்ளது , எனவும் தெரிவித்துள்ளனர்.

மசூதியில் தங்கி இருந்தவர்களுக்கு கொரனோ நோய்தொற்று உறுதியானால் இப்பகுதி முழுவதும் சீல் வைக்கப்படும் என ஒரு வித பதட்டத்துடன் கூறியுள்ளார்கள். இதற்கு முன் ஆம்பூர் மசூதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டினர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version