அட அட தமிழகத்தில் 2 ஆயிரம் புதிய பார்களுக்கு டெண்டராம்..கண்டா வர சொல்லுங்க அக்கா கனிமொழிய..

தமிழகத்தில் கடந்த 2016-ம்ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது.இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தன.

திமுக எம்.பி.,யும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் அறிக்கையில் நாங்கள் மதுவிலக்கு பற்றி கூறவில்லை என ‘பல்டி’ அடித்துள்ளார்.

மேலும் அதிமுக ஆட்சியில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.. காரணம், இங்கே குடிப்பழக்கம் மதுவுக்கு அடிமையாகும் நிலைமை அதிகரித்துக்கொண்டே போகிறது… அதை பற்றி இந்த அரசாங்கத்துக்கு கொஞ்சம் கூட அக்கறை இல்லை.. கவலையும் கிடையாது என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் திமுக ஆட்சியில் 2 ஆயிரம் புதிய பார்கள் அமைக்க தி.மு.க. அரசு டெண்டர் கோரியுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 2 ஆயிரம் கடைகளில் பார் வசதிகள் உள்ளன.இந்த நிலையில், 2 ஆயிரம் புதிய பார்கள் அமைக்க தி.மு.க. அரசு டெண்டர் கோரியுள்ளது.

இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் புதிய பார்கள் அமைக்க டெண்டர் விடப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.இந்தப் பார்கள் நவம்பர் மாதமே செயல்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது அக்டோபர் மாதம் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் பார்கள் செயல்பட உள்ளன.

அதுவும் தீபாவளி விற்பனையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இதனால் அரசுக்கு வருவாய் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும்.சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2000 கடைகளில்தான் பார்கள் இயங்கி வருகின்றன.

மீதமுள்ள மதுக்கடைகளில் பார்கள் கிடையாது. விதிகளை மீறி அங்கு பார்கள் செயல்படுவதால் வருவாய் இழப்பு ஏற்படுகின்றன.கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பார்கள் இல்லாததால் மது பிரியர்கள் கடைகள் முன்பு ரோட்டில் நின்றபடி மது அருந்தும் நிலை நீடித்து வருகிறது.

சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பார்கள் டெண்டர் விடப்படவில்லை. பார்களில் தின்பண்டங்கள் விற்பதற்கும் காலி பாட்டில்களை சேகரித்து கொடுப்பதற்கும் டெண்டர் விடப்படும். இதுவரையில் நேரடி டெண்டர் முறை இருந்து வந்தது.

தற்போது இ-டெண்டர் முதன்முதலாக விடப்பட்டு உள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பார்களுக்கு இன்று இ-டெண்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு பார்கள் நடத்த யார் அதிகபட்ச டெண்டர் குறிப்பிட்டு இருக்கிறார்களோ அவர் களுக்கு பார்கள் நடத்த அனுமதியளிக்கப்படும். நவம்பர் மாதத்தில் பார்கள் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்கள் செயல்படாததால் அரசுக்கு பலகோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

பார் உரிமையாளர்களும் நீண்ட நாட்களாக டெண்டர் விட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்த நிலையில் தற்போது டெண்டர் விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. .இந்த நிலையில் சமூக வளைத்தைலங்களில் கண்டா வர சொல்லுங்க அக்கா கனிமொழிய.. என கோடிட்டு கட்டி வருகிறார்கள்

Exit mobile version