55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம் விவசாயிகளிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து சாதனை!

2020- 21 கரீப் பருவத்திற்கான சந்தைப்படுத்துதலுக்காக, இந்திய உணவு நிறுவனம் பிற அரசு முகமைகளுடன் இணைந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் நெல்லின் கொள்முதல் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 13ஆம் தேதி வரை 10,500.72 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 55.61 லட்சம் மெட்ரிக் டன் நெல், 4.80 லட்சம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதி வரை அரசு தன் முதன்மை முகமைகளின் மூலம் 4.82 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 669.74 மெட்ரிக் டன் அவரை விதையும் உளுந்தும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 611 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது. இதேபோல 52.40 கோடி ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 5089 மெட்ரிக் டன் கொப்பரையைக் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள 3961 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விதைகளுக்கான கொள்முதல், அக்டோபர் 14ஆம் தேதி வரை 17860.56 லட்சம் ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையில் 63262 பேல்களை, இந்திய பருத்தி நிறுவனம் 13077 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்துள்ளது.

43.4% உயர்வு

2020-2021 முதல் அரையாண்டில் விவசாய விளைபொருள் ஏற்றுமதி ஏப்ரல் – செப்டம்பர் 2019 ரூ. 37,397.3 கோடி ஏப்ரல் – செப்டம்பர் 2020 ரூ. 53,626.6 கோடி பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அதிரடி நடவடிக்கைகளால் விவசாயிகள், தொழிலதிபர்களாக மாறி வருகின்றனர்

Exit mobile version