தி.மு.க 21 ஆண்டு ஆட்சியில் 6 மருத்துவக் கல்லூரிகள்! யோகியின் 5 ஆண்டு ஆட்சியில் 36 மருத்துவ கல்லுரிகள்! திமுகவின் முகத்திரையை கிழித்த SG சூர்யா

தி.மு.க 21 ஆண்டு ஆட்சியில் தமிழகத்தில் 6 மருத்துவக் கல்லூரிகளை திறந்துள்ளது, யோகி ஆதித்யநாத் 5 ஆண்டு ஆட்சியில் உத்திர பிரதேசத்தில் 36 மருத்துவக் கல்லூரிகளை திறக்க இருக்கிறார்.உத்திர பிரதேசம் முன்னேறவில்லை என தி.மு.க-வினர் ஒவ்வொரு நாளும் பகடி செய்வது மட்டுமின்றி அதற்கு பா.ஜ.க தான் காரணம் என புரட்டு வரலாற்றை எழுதி வருகின்றனர்.

1991 முதல் 1992 வரை ஒன்றரை ஆண்டும், பின்பு 1997 முதல் 1999 வரை இரண்டு ஆண்டுகள் என மொத்தம் மூன்றரை ஆண்டுகளுக்கு மட்டுமே அங்கு பா.ஜ.க-வின் கல்யாண் சிங் முதல்வராக பதவி வகித்தார். அதுபோக இரண்டு முறை பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம், அப்போது மாயாவதி தான் முதல்வராக இருந்தார், ஒரு முறை ராஜ்நாத் சிங் ஒரு வருடம் முதல்வராக இருந்துள்ளார். எனவே, 2017-ஆம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று அடுத்த ஆண்டு 2022 மார்ச் மாதம் தான் முழுமையாக 5 ஆண்டுகளை யோகியின் ஆட்சி செய்து முடித்திருக்கும்.

உண்மையில் உத்திர பிரதேசம் வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கு காராணமே உத்திர பிரதேசத்தை 1947 முதல் 2017 கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆண்டு கபளீகரம் செய்துள்ள தி.மு.க-வின் கூட்டாளிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தான். கிஞ்சித்தும் logic இன்றி 75 ஆண்டு வரலாற்றில் 4.5 ஆண்டு மட்டுமே ஆண்ட ஒரு கட்சி தான் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியின்மைக்கு முழு காரணம் என போலி முத்திரைக்குத்துவது எப்பேற்பட்ட புரட்டு?(ஈ.வெ.இராமசாமியின் போலி UNESCO விருது போன்று!)

கடந்த ஐந்து ஆண்டுகளில் தான் கழிப்பறை, மின்சரம், குடிநீர் இணைப்பு, கேஸ் அடுப்பு, வங்கி கணக்கு, தரமான சாலைகள் என முதன்முறையாக வளர்ச்சியையே அம்மக்கள் கண்ணால் பார்க்கின்றனர். அதனால் தான், எதிரும் புதிருமாக இருந்த இரு பெரும் கட்சிகளான அகிலேஷ் – மாயாவதி கூட்டணி சேர்ந்தும் 2019 பாராளுமன்ற தேர்தலில் 15/80 எம்.பி-க்களை மட்டுமே வெல்ல முடிந்தது. பா.ஜ.க தனித்து நின்று முதன்முறையாக அனைத்து ஜாதிய கணக்குகளையும் தகர்த்தெறிந்து 64/80 இடங்களை அபாரமாக வென்றது.

அடுத்த வருடம் சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க 403 இடங்களில் 300-க்கும் மேல் வெற்றி வாகை சூடும்.அம்மாநில மக்களுக்கு தெரியும் அவர்களுக்கு யார் வேண்டும்? யார் நல்லது செய்கின்றார்கள்? என்று. சும்மா இங்கே உட்கார்ந்துக் கொண்டு வாங்கும் தினக்கூலி ₹200/-க்காக உடன்பிறப்புக்கள் மற்ற மாநில மக்களை கேலி செய்வது அயோக்கியத்தனம். பாஜக செய்தி தொடர்பாளர் : SG சூர்யா பா.ஜ.க செய்தி தொடர்பாளர் https://www.facebook.com/SuryahSG/posts/1633141036880109

Exit mobile version