உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அளித்த பேட்டியில்,
உத்தரப் பிரதேச மாநிலம் பாஜக அரசிற்கு முன் முன்பு ஆறாவது பெரிய பொருளாதாரமாக மாநிலமாக இருந்தது. தற்போது பாஜக அரசாங்கத்தின் கீழ் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாஜக ஆட்சி காலத்தில் மாநிலத்தில் 4.5 லட்சம் மக்கள் அரசு வேலைகளை பெற்றுள்ளார்கள்
1 கோடியே 61 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.சிறுதொழில் செய்வோர் மற்றும் புதிய தொழிமுனைவோர் என 60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கடன் உதவி செய்யப்பட்டுள்ளது. உபி வணிக தரவரிசைகளை எளிதாக்குவதில் பாஜக ஆட்சிக்கு முன்பு இருந்த பன்னிரண்டாவது இடத்திலிருந்து தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்து சாதனை படைத்துள்ளது உபி
உ.பி.யில் பாஜக ஆட்சியின் போது பல்வேறு அரசு நல திட்டங்களை வெற்றிகரமாகசெயல்படுத்தியுள்ளது என கூறினார். பிரதமரின் கூற்றுப்படி, நகர்ப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடுகளை வழங்குவதற்கான இந்திய அரசின் முயற்சியான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) மூலம் 44 லட்சம் மக்களுக்கு வழங்கியுள்ளது.மேலும், 2 கோடியே 61 லட்சம் மக்களுக்கு மாநிலத்தில் தனிநபர் கழிப்பறை வசதி வழங்கப்பட்டது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு லாக் டவுன் காலத்தில் மாநிலத்தில் 15 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கியுள்ளது. இலவச மின் இணைப்பு திட்டமான பாக்யா மூலம் 1 கோடியே 38 லட்சம் மக்கள் இலவச மின் இணைப்பு வழங்கியுளோம்
முதல்வர் யோகி ஆதித்யநாத் மேலும் கூறுகையில் மாநிலத்தில் தற்போதுள்ள சட்டம் மற்றும் ஒழுங்கை பாராட்டினார், மேலும் மாநிலத்தில் உள்ள மக்கள் தங்கள் வாழ்க்கையில் பாதுகாப்பாக உள்ளதாக உணர்கிறார்கள்.
இது மாநிலத்தின் மாற்றத்திற்கு காரணமாகும் என்றும் கூறினார். உ.பி.யில் 3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தில் சிறந்த சட்டம் ஒழுங்கு காரணமாக இவை அனைத்தும் சாத்தியமாகியுள்ளதாகவும் அவர் கூறினார். சுலபமாக தொழில் செய்வதற்கான தரவரிசையில், UP 12 வது இடத்திலிருந்து 2 வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.