ஏறுமுகத்தில் அதிமுக பிஜேபி கூட்டணி.

சட்டமன்ற தேர்தலை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கும் நிலையில் களங்களில் இருந்து வரும் செய்திகள் அதிமுக கூட்டணி ஏறு முகத்தை நோக்கியும் திமுக கூட்டணி இறங்கு முகத்தை நோக்கியும் செல்கிறது என்று கூறுகின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணி31 சதவீத வாக்குகளையே பெ ற்று இருந்தது.திமுக கூட்டணிக்கு 52 சதவீதவாக்குகள் கிடைத்து இருந்தது.

திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணி க்கும்இருந்த வாக்கு வித்தியாசம் வரலா று காணாத வகையில் 21 சதவீதமாக இருந்தது.

இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அப்பொழுது தமிழக மக்களிடம் மேலோங்கி நின்ற பிஜேபி எதிர்ப்பு தானே தவிர திமுக கட்சிகளின் கூட்டணி பலம் அல்ல என்பது தான் 100 சதவீத உண்மையாகும்.

ஆனால் இப்பொழுது நிலைமை மாறிக்கொண்டு வருகிறது.லோக்சபா தேர்தலில் மையமாக இருந்த பிஜேபி எதிர்ப்பு இப்பொழுது குறைந்து சட்டமன்ற தேர்த லில் அதிமுக ஆதரவு மனநிலை மக்களி டம் அதிகரித்து வருகிறது.

லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற 52 சதவீத வாக்குகளில் இருந்து இப்பொழுது 7 சதவீதம் குறைந்து 45 சத
விதமாக இருக்கிறது.

அதே நேரத்தில் அதிமுக கூட்டணி திமுக இழந்துள்ள 7சத வீத வாக்குகளில் 4 சதவீதவாக்குகளை இப்பொழுது பெற்று இருக்கிறது


அதனால் அதிமுக கூட்டணி இப்பொழுது குறைந்து 35 சதவீத வாக்குகளை வை த்து இருக்கிறது என்றே கள நிலவரங்கள்
கூறுகின்றன.

ஆக அதிமுக கூட்டணி திமுக கூட்டணியை விட இப்பொழுதும் 10 சதவீத வாக்கு கள் வித்தியாசத்தில் பின் தங்கியே இருக்கிறது.

இந்த 10 சதவீத வாக்குகளும் திமுக கூட்டணி பலத்தினால் கிடைக்கும் வாக்குகள் அல்ல.

மாறாக அதிமுக பிஜேபி கூட்டணிக்கு எதிராக உள்ள ஆன்டி இன்கம்பன்சி வாக்குகள் தான்.

இந்த 10 சதவீத வாக்குக ளை எப்படி திமுக கூட்டணியில் இருந்து
பிஜேபி பிரிக்க போகிறது என்பதில் தான் அதிமுக பிஜேபி கூட்டணியின் வெற்றி அடங்கி இருக்கிறது.

இப்பொழுது அந்த 10 சதவீத ஆன்டி இ ன்கம்பன்சி வாக்குகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கு ம் 3 வது மற்றும் 4 வதுஅணிகளால் பிரிக்கப்படும்.

இந்த வாக்குப்பிரிப்பு 3 வது 4 வது அணிகளில் இடம் பெறப்போ கும் கட்சிகளின் வலிமையை பொறுத்து அமையும்.

அதிமுக பிஜேபிக்கு எதிராக உள்ள கட்சிகள் 3 வது மற்றும் 4 வது அணிகளை உருவாக்கி கூட்டணி சேரும் பொழுது அதிமுக பிஜேபிக்கு எதிராக திமுக தான் ஒரே சாய்ஸ்வஎன்கிற ஆப்சன் இல்லாமல் போய் விடும்இதனால் திமுகவை பிடிக்காத பிஜேபி அதிமுக எதிர்ப்பு வாக்காளர்க ள் 3 வது4வது அணியை நோக்கி செல்வது தவிர்க்க முடியாத நிலை உருவாகிவிடும்.

இதனால் திமுக வசம் உள்ள அதிமுக அரசுக்கு எதிராக உள்ள 10 சதவீத ஆன்டி இன்கம்பன்சி வாக்குகளில் பாதி குறைந்து விடும்.

அதனால் திமுக இப்பொழுது உள்ள 45 சதவீத வாக்குகளில் இருந்து 5 சதவீத வாக்குகளை இழந்து 40 சதவீத
வாக்குகளாக குறைந்து விடும்.

ஆனாலும் அதிமுக வாக்குகள் அதே 35 சதவீதமாகவே இருக்கும்.அதிமுக கூட்ட ணி இனி எந்த ஒரு நிலையிலும் வாக்கு
களை இழக்க முடியாது. ஆனால் திமுக கூட்டணி இனி தொடர்ந்து வாக்குகளை இழந்து கொண்டே வரும்.

இனி வரும் காலங்களில் திமுக கூட்டணியில் தான் பிளவுகள் ஏற்பட்டு கூட்டணி கட்சிகள் வெளியேற முடியும் என்பதால் திமுக கூட்டணியின் ஓட்டு சதவீதம் தான் குறையும்.

இந்த நிலையில் வைகோ திருமாவளவ ன் போன்ற பிஜேபி எதிர்ப்பு தலைவர்கள்
திமுக கூட்டணியில் இருந்து விலகி விட் டால் திமுக கூட்டணி குறைந்தது 2 சதவீத வாக்குகளை இழந்து விடும்.இப்பொழுது திமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 38 சதவீதமாக குறைந்து விடும்

திமுக இழக்கும் ஒவ்வொரு கூட்டணி கட்சிகளின் மூலமாக இனிஅதனுடைய வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே வரும்.

இதனால் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்கிற மனநிலை .

மக்களின் மனதில் உருவாகி கொண்டே வரும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக அதிமுககூட்டணியின் வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்டே வரும்..

ஏனென்றால் ஜெயிக்கிற கட்சிக்கு தான் ஓட்டு போடுவோம் என்று ஓட்டு போடும் மனநிலையில் குறைந்தது 5 சதவீதம் வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் மனதில் திமுக கூட்டணி தோற்கும் என்கிற நிலை உருவாகும் பொழுது அவ ர்களினால் திமுக கூட்டணி வாக்கு சதவீதம் குறைந்து அதிமுக வாக்கு சதவீதம் அதிகரித்து விடும்.

அதிமுக கூட்டணியில் போட்டி அதிமுக வை நடத்தும் தினகரனினால் அதிமுகவில் இருந்து இனிபெரிய அளவில் வாக்குகளை பிளக்க முடியாது.

ஆனால் அழகிரிஉருவாக்கும் போட்டி திமுகவினால் திமுக கூட்டணி இன்னும் வலு விழந்து கொண்டே செல்லும்

இதனால் தேர்தல் நெருங்கி வரும் பொழு து அதிமுக கூட்டணி திமுக கூட்டணியைவிட மயிரிழையில் முந்தி நிற்கும்.

ஒரு வேளை திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விட்டது என்று வைத்து கொள்வோம் .

காங்கிரஸ் இல் லையென்றால் திமுக கூட்டணி 35 சதவீத வாக்குகளை நிச்சயமாக தாண்டாது. அ ப்பொழுது அதிமுக கூட்டணி 40 சதவீத வாக்குகளை தாண்டி விடும்.

ஒரு வேளை சசிகலா சிறையில் இருந்து வெளி வந்த பிறகு தினகரனின் போட்டி அதிமுக தேர்தலில் போட்டியிடாது என்று முடிவெடுத்தால் அதிமுக கூட்டணி நிச்சய மாக 45 சதவீத வாக்குகளை பெற்று விடும் என்று உறுதியாக கூறலாம்.

தினகரன் கட்சி இந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டி இல்லை அல்லது காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுதல் இந்த இரண்டு நிகழ்வுகளில் ஏதாவது ஒன்று நடைபெற்றாலே போதும் அதிமுக கூட்டணி மீண்டும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று விடும்.

ஏனென்றால் திமுக வுக்கு இப்பொழுது உள்ள ஒரே ப்ளஸ் பாயிண்ட் காங்கிரஸ்கூட்டணி தான். அதே மாதிரி அதிமுகவுக்கு இப்பொழுது உள்ள ஒரே மைனஸ் தினகரன் கட்சி பிரிக்கும் ஓரளவு வாக்கு கள் தான்.

இந்த இரண்டு காரணங்களாலும் அதிமுக கூட்டணி பெற இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மாறு படும்.

இந்த இரண்டில் எதுவுமே நடைபெற வில்லை என்றாலும் அதிமுக பிஜேபி கூட்ட ணி பீகாரில் பிஜேபி கூட்டணி வெற்றிபெற்றது மாதிரி வெற்றி பெறுவது உறுதி

தேர்தல் நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் உண்டாகும் குழப்பங்கள் திமுகவை இறங்கு முகத்தை நோக்கியும் அதிமுகவை ஏறு முகத்தை நோக்கியும் கொண்டு செல்லும் சென்று கொண்டு இருக்கிறது என்பதையே தமிழக தேர்தல்
களம் தெரிவிக்கிறது.

Exit mobile version