ரஜினியை நோக்கி அதிமுக செல்கிறதா

இன்னும் சில மாதங்களில் ரஜினிக்கு அதிமுகவில் இருந்தே வாருங்கள் திமுகவை வீழ்த்த இணைந்து செயலாற்றுவோம் என்று அழை ப்பு வர இருக்கிறது.இந்த அழைப்பை ஏற்று
ரஜினியும் அதிமுகவில் ஐக்கியமாவார் என்று எதிர்பார்க்கலாம்.

வருகின்ற செய்திகள் எல்லாம் அதிமுக ரஜி னியை நோக்கியே சென்று கொண்டு இருக்கி றது என்பதையே உணர்த்தி வருகின்றன. இ துதான் தமிழக அரசியலை கைப்பற்ற பிஜேபி
வைத்து இருக்கும் மாஸ்டர் பிளான்.

ரஜினி அதிமுக சார்பு செய்திகள் இப்பொழுது அடிக்கடி வர ஆரம்பித்து இருக்கிறது. ஒருபக்கம் நேற்று வரை ரஜினியை எதிர்த்து வந்த அதிமுக அமைச்சர்களில் ஒருவரான உதயகுமார் இப்பொழுது ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்.மக்கள் பணியாற்ற வேண்டும் என்கிறார்.

இன்னொரு அதிமுக அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் ரஜினி அதிமுகவில் இணையக்கூடும் என்று கடந்த லோக்சபா தேர்தலு க்கு முன்பே கூறி இருக்கிறார்.அதிமுக அமைச்சர்கள் பலர் இப்பொழுது ரஜினி ஆதரவை வெளிப்படையாக பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஏனென்றால் ரஜினியின் நேரடி அரசியல் வருகையால் முதலில் பாதிக்கப்பட போவது அதிமுக தான். ரஜினி ஆதரவு தளமும் அதிமுக ஆதரவு தளமும் கிட்டத்தட்ட ஒரே அடிப்படையில் உள்ளவை.

அதனால் ரஜினியின் அரசியல் அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவுக்கு பலனளிக்கும் என்பதால் திமுக வெற்றிபெறக்கூடாது என்பதற்காக ரஜினியை அதிமுகவுக்கு வாருங்கள் என்று அழைப்பு வைக்கப்பட்டு அதையே சாக்காக வைத்து ரஜினி அதிமுகவில் இணைவார்.

கடந்த வாரம் தான் தமிழருவி மணியன் ரஜினி ஏப்ரலில் தனிக்கட்சி ஆரம்பிக்க இருக்கிறார். ஆகஸ்ட்டில் மாநாடு அடுத்து தமிழகம் முழுவதும் சுற்று பயணம் என்று வாயாலே வடை சுட்டுக்கொண்டு இருந்த தமிழருவி்மணியன் இப்பொழுது சாப்பிடகூட வாய்திறப்பது இல்லை.

அந்த அளவிற்கு ரஜினி கொடுத்த ட்ரீட்மெண்ட்டில் தமிழருவி மணியனின் வாய் மூடிக்கொண்டது.

தமிழருவி மணியன் ரவீந்திரன்துரைசாமி போன்றவர்கள் அரசியலில் நீண்டகால அனுபவத்தை வைத்து இருந்தாலும் ரஜினி அவர்களை விட பல மடங்கு அரசியல் அனுபவம் மட்டுமல்லாது அறிவையும் கொண்டவர்.

அதனால் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் நடத்தும் அளவிற்கு தன்னிடம் பொறுமையும்
தொலை நோக்கு பார்வையும் இருக்கிறதா என்பதை ரஜினி உணர்ந்தே இருக்கிறார். ஆனால் இதைப் பற்றி அவருடைய ஆதரவாள ர்கள் அறியாமல் தனிக்கட்சி ஆட்சி என்று கனவில் மிதக்கிறார்கள்.

பிஜேபியின் தமிழக ப்ளான் என்னவென்றால் ரஜினி மூலமாக திமுக எதிர்ப்பு சக்திகளை இணைக்க வேண்டும்.

கமல் மூலமாக திமுக ஆதரவு சக்திகளை பிளக்க வேண்டும். இதை நோக்கியே தமிழக அரசியல் சென்று கொண்டு இருக்கிறது.

ரஜினியின் நோக்கம் திமுகவுக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்கி திமுகவை
தோற்கடிப்பது தான். இதற்கு அவர் தனிக்க ட்சி ஆரம்பித்தால் சாத்தியமே கிடையாது.

இதனால் திமுக எளிதாக வெற்றி பெற்று விடும்.ஆக பொது எதிரியான திமுகவை வீழ்த்த ரஜினி அதிமுக பாமக ஆகியவர்களுக்கு பொது
நண்பனாக உள்ள பிஜேபி அதிமுகவில் ரஜினியை ஐக்கியமாக்க நினைக்கிறது.

வலதுசாரி சிந்தனையாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version