சென்னை கோயம்பேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் அந்தணர் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நிறுவனத் தலைவர் ஸ்ரீ ராஜாளி ஜெயப்பிரகாஷ் ராவ் தலைமையில் நடைபெற்றது.உடன் பொதுச்செயலாளர் ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா,
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது..
1.தமிழகத்தில் தொடர்ந்து பிராமண ஜாதியினரை ,பார்ப்பாண் என சொல்லி கேலி கிண்டல் செய்வது பெருகியுள்ளது.இதுபோன்று பிராமண ஜாதி பெயரை சொல்லி அவமதிப்பு செய்பவரை
காவல்துறை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைதுசெய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2.பொழுதுபோக்கு என்ற பெயரில் ,திரைபடங்களில் பிராமண சமூகத்தையும் அதன் கலாச்சாரங்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறது.திரைப்பட தணிக்கை துறையில் தனிக்குழு அமைத்து இதனை தடுத்து ,
பிராமண சமூகத்தின் மனவேதனை போக்க தமிழக அரசு முன்வர வேண்டுகிறோம்.
3.பொருளாதாரத்தில் பின்தங்கிய ,கோவிலில் கைங்கர்யம் புரியும் அர்ச்சகர்களுக்கு,பட்டச்சாரியார்களுக்கும்,சிவாச்சாரியார்களுக்கும்,தீட்சிதர்களுக்கும் மற்றும் புரோகிதர்களுக்கும் ,சமையல் கலைஞர்களின் குடும்பத்தின் நலன் மேம்பட ,”அந்தணர் நலவாரியம்” அமைக்க வேண்டி தமிழக முதல்வரிடம் நேரடியாகவும்,தமிழக அரசின் முதல்வர் தனிப்பிரிவிலும்,சிறப்பு சீர்திருத்த நிர்வாக துறை அமைச்சரிடமும் நேரடியாக மனு அமுக நிர்வாகிகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி தொழிலாளர் ஆணையரகம் அடுத்தக்கட்ட தகவல்களை எங்களுக்கு தெரிவிக்கக்கோரி தமிழ்நாடு உடலுழைப்புத்தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியம் செயலாளருக்கு பரிந்துரை செய்துள்ளது,இதனை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழக முதல்வா் ஸ்ரீ எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் ,
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை பிராமணர்களின் நலனுக்காக விரைவில் “அந்தணர் நலவாரியம்” அமைக்குமாறு வேண்டுகிறோம்.
4.ஹிந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில்,அர்ச்சகர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை ,தமிழக அரசு விரைவில் அவர்களுக்கான நிலுவை ஊதிய தொகையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோல் கோவில்களில் அர்ச்சனை சீட்டில் வசூலிக்கப்படும் தொகையில் அர்ச்சகர்களுக்கு உரிய
பங்கு பல கோவில்களில் வழங்கப்படவில்லை,அதற்கான பங்கினை அர்ச்சகர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வழங்க கேட்டுக் கொள்கிறோம்.
5.ஹிந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பல இடங்களில் அர்ச்சகர்களை அவமதித்து வருகிறார்கள்,அதனால் அதனை சரிசெய்யும் வகையில் அர்ச்சகர்கள் தங்கள் குறைகளை நேரடியாக துறை அமைச்சருக்கும் மற்றும் தமிழக முதல்வரின் நேரடி பார்வையில் தெரியப்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
6.பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ மோடி அவர்களின் அரசு வழங்கியுள்ளது ,அதனை விரைவில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்ரீ எடப்பாடி K. பழனிச்சாமி அவர்களின் அரசு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த கேட்டுக்கொள்கிறோம்.
7.பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்திற்கான 10% ஒதுக்கீடு சம்பந்தமாக ,
முற்பட்ட சமூகத்தை சேர்ந்த மாற்று ஜாதி மற்றும் மாற்று மத தலைவர்களை சந்தித்து அவர்களை ஒருங்கிணைத்து விரைவில் அடுத்தக்கட்ட முன்னெடுப்புகாக ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தயுள்ளோம்.
8.டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்ரீ எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசுக்கு நன்றி.
9.மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த மசோதா CAA CAB NRC அமுக வரவேற்க்கின்றது.
குடியுரிமைசட்டதிருத்த மசோதாவால் இந்திய குடிமக்கள் யாவருக்கும் எந்த மதத்தினருக்கும் பாதிப்பில்லை.இந்திய இசுலாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்தியஅரசு தெளிவாக கூறியுள்ளது.
ஆகவே இந்திய இசுலாமிய சகோதரர்கள் தேசவிரோத சக்திகளின் CAA எதிரான பொய்பிரசாரத்தை நம்பவேண்டாம்.
CAA சட்டத்தால் இந்திய இசுலாமியர்களுக்கு பாதிப்பென்றால் அந்தணர் முன்னேற்றக் கழகம் இந்திய இசுலாமியர்களுக்கு ஆதரவாக நிற்க்கும்.
10.பிராமண சமூக மக்களுக்கெதிரான ஜாதி அவமதிப்பை தடுக்கவும்,பிராமணர்களின் நலனுக்காக அந்தணர் நலவாரியம் மற்றும் இடஒதுக்கீடு வழங்குதல்,பிராமண சமூக மக்களுக்காக செயல்பட்டு வரும் அமுக சமுதாய அமைப்புக்கு ,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ,சட்டமன்ற தொகுதி பங்கீட்டில் ,உரிய தொகுதிகள் ஒதுக்கும் கட்சிக்கு அவர்களுடன் கூட்டணியில் 2021 சட்டமன்ற தேர்தலில் ஒன்றுப்பட்டு அமுக செயல்படும்.
என்று ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர்
அந்தணர் முன்னேற்ற கழகம் குறிப்பிட்டுள்ளார்.