பீகாரை அடுத்து ஜார்கண்ட்..குறி வைத்த பா.ஜ.க குழப்பத்தில் காங்கிரஸ்..

hemant soren

hemant soren

பீகாரை அடுத்து ஜார்கண்டிலும் ஹேமந்த் சோரன் தலைமையி லான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து இருக்கின்றன.மிக விரைவில் ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கலாம்.

ஜார்கண்டில் ஆட்சி கவிழ்வது உறுதி ஆனால் அதற்கு பிறகு பிஜேபி ஆட்சியா? இல்லை ஜனாதிபதி ஆட்சியா? இதற்குத் தான் இன்னும் சில நாட்களில் விடை தெரியும்.ராகுல் மேற்கு வங்காளத்தில் யாத்திரையை ஆரம்பிக்கும் முன் மம்தா பானர்ஜி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

பாரளுமன்ற தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 14 தொகுதிகளில் சரிபாதி இடங்களை ஒதுக்க வேண்டும் என ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிபந்தனை விதித்திருப்பது காங்கிரஸ் மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.

காங்கிரஸோ 4 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கொடுக்கலாம் என நினைத்திருந்த வேளையில் 7 தொகுதிகளை கொடுத்துதான் ஆக வேண்டும் என அடம் பிடிக்கிறதாம். 4 தொகுதி, 3 தொகுதி கணக்கெல்லாம் இனி செல்லாது; கேட்கிற தொகுதிகளை கொடுங்க.. ஆளுக்கு 50% 50% ஷேர் என பிரித்துக் கொண்டு சுமூகமாக தேர்தலில் போட்டியிடுவோம் என மிரட்டி இருக்கிறதாம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா.

தற்போது தான் தொகுதி பங்கீடு மேலும் பல்வேறு காரணங்களை காட்டி நிதிஷ் குமார் இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து பீகாரில் காங்கிரஸ் கூட் டணி ஆட்சி கவிழ்ந்து. மீண்டும் பாஜக தயவுடன் நிதிஷ் குமார் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த நிலையில் பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத் துறை சார்பில் 9 சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால், ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இன்று டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் அமலாக்கத் துறை அதிகாரிகள்.

மேலும் காங்கிரஸ் ஜார்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை கழட்டிவிடலாம் அல்லது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இண்டி கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என தகவல்கள் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ராகுல் பீகாரில் நுழையும் முன்பு காங்கிரஸ் கூட் டணி ஆட்சி கவிழ்ந்து பிஜேபி ஆட்சி அமைந்து விட்டது
காங்கிரஸ் கூட்டணி உடைவதற்கும் ராகுல் யாத்திரைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது.ராகுல் யாத்திரை பீகாரில் இருந் து ஜார்கண்ட்டில் நுழையும் பொழுது அங்கு காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது.ராகுல் யாத்திரை பீகாரில் இருந் து ஜார்கண்டில் பிப்ரவரி 2 ம் தேதி நுழைகிறது. அதற்குள் அந்த சம்பவம் நிகழ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Exit mobile version