பாராளுமன்றத்தில் டில்லி கலவரம் பற்றி அனல் தெறிக்கவிட்ட அமித்ஷா

பாராளுமன்றத்தில் டில்லி கலவரம் பற்றி பதிலளித்த உள்துறை அமைச்சர் குறிப்பிட்ட பல விஷயங்களிலிருந்து சில…

இதை ஹோலி பண்டிகைக்கு பிறகு விவாதிக்கலாம் என்று நான் கூறியதற்கு காரணம், ஹிந்து பண்டிகை வரும் சமயத்தில் இந்த கலவரம் பற்றி விவாதம் செய்தால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என்பதால். (இப்போது பண்டிகை முடிந்த வேளையில் விவாதிப்பதால் பாதகமில்லை.)

குடியுரிமை சட்ட திருத்தம் பற்றி வேண்டுமென்றே தவறான தகவல்கள் பரப்பப்பட்டு கலவரம் தூண்டப்பட்டுள்ளது. வெறுப்பு பேச்சுக்களால் தூண்டப்பட்டது.

டில்லி காவல்துறையின் நடவடிக்கையில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த கலவரம் முழுக்க முழுக்க திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று.

டிரம்ப் போனதிலிருந்து இது வரை எந்த கலவரமும் இல்லை.

முக்கியமான சிலர் (PFI, AAP தாஹீர்+++) கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மூலம் இந்த கலவரத்துக்கான திட்டமிடல், பணம் எப்படி வந்தது போன்ற விவரங்களை காவல்துறை சேகரித்து வருகிறது.

கலவரத்துக்கு பணம் கொடுத்த விதத்தில் மூவர் கைது. விசாரணை நடந்து வருகிறது.

உபியிலிருந்து 300 பேர் கொண்டு வரப்பட்டு கலவரத்தில் ஈடுபடுத்த பட்டுள்ளனர் (பீம் சேனை ??)

என் அறிவுறுத்தலின்பேரில் அஜித் டோவல் டில்லியின் கலவர இடங்களை பார்வையிட்டார். நான் (அமைச்சர்) செல்லாததற்கு காரணம் காவல்துறைக்கு அதிக பளு ஏற்படும் என்பதால் (அமைச்சர் பாதுகாப்பு +++).

பிப் 22 அன்று 60 சமூகவலைதள கணக்குகள் திறக்கப்ப்ட்டு, கலவரத்தை தூண்டும் விதமாக பதிவுகளிட்டு, பிப் 26 அன்று அந்த கணக்குகளை மூடி சென்றிருக்கின்றனர் கலவரக்காரர்கள்.

அவர்கள் தப்பிவிட்டோம் என்று நினைத்தால் அது தவறு. சமூகவலைதள நிறுவனங்களுடன் டில்லி காவல்துறை அதுபற்றி விவரங்கள் சேகரித்து வருகிறது.

பதிப்புக்கான இழப்பீடுகளை கலவரக்காரர்களிடம் இருந்து பெற காவல்துறை முடிவெடுத்துள்ளது.

டில்லி காவல்துறை Facial recognition system மூலம் கலவரக்காரர்களை அடையாளம் கண்டு வதுகிறது (ஆமித் ஷா இதை சொன்னதும் காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. திருடர்களை பிடித்தால் இவர்கள் ஏன் டென்ஷனாகிறார்கள்?).

இவ்வாறு அனல் பறக்கும் விதமாக பாராளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பரபரப்பாக பேசினார்.

கட்டுரை:- வலதுசாரி சிந்தனையாளர் செல்வநாயகம்.

Exit mobile version