திமுக மீது அட்டாக் நடத்த மாஸ்டர் பிளான் உடன் தமிழகம் வரும் அமித்ஷா.

தமிழகத்திற்கு வருகின்ற 21 ம் தேதி அமித்ஷா வருகிறார் என்றவுடன் தமிழக
அரசியல் அதிர ஆரம்பித்து விட்டது. ரஜினியை அமித்ஷா சந்திக்க இருக்கிறார் என்று பரவி வரும் தகவல்களினால் அமித்ஷாவின் தற்போதைய வருகை
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த லோக் சபா தேர்தலின் பொழுது தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் தேர்தல் வியூகங்களை அமித்ஷா முன்னெடுத்து செல்ல விரும்பினார்.

ஆனால் அதிமுக அப்ரண்டிஸ்கள் அதை விரும்ப வில்லை.

இப்பொழுது அதிமுக பிஜேபி கூட்டணியின் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் அமித்ஷாவின்
நேரடி கட்டுப்பாட்டில் தான் என்று அதிமுக தரப்பில் ஏற்றுக் கொண்டதால் அமித்ஷா
வை தமிழக அரசியலில் இனி தன்னுடைய வியூகங்களை வெளிப்படுத்துவார் என்பதால் திமுக தரப்பு இப்பொழுதேடர்ராகி விட்டது.

இன்னொரு முக்கியமான விசயம் அமித்ஷாவுக்கும் திமுகவின் தேர்தல் வியூக ங்களை வகுத்து வரும் பிரசாந்த் கிஷோர்க்கும் இடையே ஆகாது என்பதால் திமுகவை தோற்கடித்து பிரசாந்த் கிஷோர்க்கு அமித்ஷா பாடம் கற்பிக்க தமிழக தேர்தலை அமித்ஷா கையில் எடுத்து இருக்கிறார்.

ஆக வெயிட்டிங் பார் அமித்ஷா ஆட்டம்.

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி.

Exit mobile version