அமித்ஷாவின் மாஸ்டர் பிளான் சல்லிசல்லியாக நொறுங்கிய காங்கிரஸ் ..

உத்தரபிரதேச ராஜ்ய சபா தேர்தல்.

உத்தரபிரதேசத்தில் இருந்து காலியான 10 ராஜ்ய சபா இடங்களில் பிஜேபிக்கு 8 இடங்கள் கிடைத்து இருக்கிறது. ஒன்று
பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ,சமாஜ்வாடி கட்சிக்கு ஒன்றும் கிடைத்து இருக்கிறது.

10 இடங்களுக்கு 11 வேட்பாளர் போட்டி என்று உத்தரபிரதேச அரசியல் சூடு பிடித்து வந்த நிலையில் சமாஜ் வாடி ஆதரவு ட ன் போட்டியிட்ட 11 வேட்பாளரான பிரகாஷ் பஜாஜின் வேட்புமனு நிராகரிக்கப்
பட்டதால் தேர்தல் இன்றி முடிவுகள் வந்துவிட்டது. போட்டியிட்ட 10 பேரும் எம்பியாகி விட்டார்கள்.

403 எம்எல்ஏக்களை உடைய உத்தரபிர தேசத்தில். இருந்து ஒரு ராஜ்ய சபா எம் பி தேர்வாக 37 எம்எல்ஏ க்களின் ஆதரவுவேண்டும். பிஜேபிக்கு 306 எம்எல்ஏக்கள் இருப்பதால் 8 எம்பிக்கள் உறுதியாக இருந்தது.

பிஜேபியின் B டீம் மாதிரி இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அதனால் மாயாவதியால் ஒரு எம்பி கூட பெற முடியாத நிலையே இருந்தது.

இதனால் பிஜேபி தன்னுடைய கூட்டணி யில் உள்ள அப்னாதளம்-9 சுயேச்சை-3 இவர்களோடு சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் 4 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பகுஜன் சமாஜ்கட்சிக்கு 1 எம்பி கிடைக்க உதவுவதாக கூறி இருந்தது

இதனால் பகுஜன் சமாஜ் கட்சியின் ராம்ஜி கவுதம் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தார். பிஜேபி நினைத்து இருந்தால் 9 வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற்று இருக்க முடியும். ஆனால் எதி ர் கால அரசியலை அதாவது 2022 சட்டம ன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி.

சமாஜ் வாடி கூட்டணிக்கு செல்லவிடாமல் தடுக்க மாயாவதிக்கு ஒரு ராஜ்ய சபா இடத்தை அளிக்க பிஜேபி முடிவு செய்தது


சமாஜ்வாடி கட்சிக்கு 48 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இதனால் சமாஜ் வாடி க்கு 1 எம்பி உறுதியாக இருந்தது. இருந்தாலும் அகிலேஷ் யாதவ் இன்னொரு எம்பியை கைப்பற்றி நினைத்து களம் இறங்கி இப்பொழுது மண்ணை கவ்விநிற்கிறார்.

காங்கிரஸ் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். இவர்களின் துணையுடன் பகுஜன் சமாஜ் கட்சியை உடைத்து இன்னொரு எம்பி பதவியை கைப்பற்ற நினைத்து பிரகாஷ் பஜாஜ் என்பவரை நிறுத்தி இருந்தார். அவருக்கு பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 5 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க முன் வந்தார்கள்.

இதனால் பகுஜன் சமாஜ் கட்சி உடையும் நிலையில் இருந்தது.ஆனால் கடைசியில் சமாஜ்வாடி ஆதரவு வேட்பாளர் பிரகாஷ்
பஜாஜின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்து விடவே பகுஜன் சமாஜ் வேட்பாளர் எம்பியாகி விட்டார்.

இது தாங்க சாமர்த்தியமான அரசியல். உத்தரபிரதேசத்தில் வருகின்ற 2022 சட்டமன்ற தேர்தலில் பிஜேபிக்கு எதிராக ஒரு
மெகா கூட்டணியை சமாஜ் வாடி அமைத்தால் மட்டுமே பிஜேபியின் வெற்றிக்கு தடை போட முடியும் என்கிற நிலையில்
அகிலேஷ் யாதவ் மாயாவதியை சந்தி த்து ராஜ்ய சபா தேர்தலில் இணைந்துசெயல் படுவோம் என்று கூறி இருந்தால்
எதிர்காலத்தில் பிஜேபிக்கு எதிராக மெ கா கூட்டணி உருவாக வாய்ப்புகள் இருந்தது.

ஆனால் அகிலேஷ் ஒரு ராஜ்ய சபா இடத் திற்கு அவசரப்பட்டு உத்தர பிரதேச முதல்வர் பதவியை இழந்து விட்டார்.சமாஜ்
வாடி பகுஜன் சமாஜ் காங்கிரஸ் என்று

மூன்று கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால் தான் பிஜேபியிடம்இருந்து வெற்றியை பறிக்க முடியும் என்கிற நிலையில் இனி
அதற்கு வாய்ப்பு இல்லை என்கிற நிலையை அகிலேஷ் யாதவ் உருவாக்கி விட்டார்.

ஆக உத்தர பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆட்சி தான்.No one can stop it.

நேற்று ராஜ்ய சபா தேர்தல் முடிவுகளை தேர்தல் கமிசன் அதிகார பூர்வமாக அறிவித்து விட்டது. இதனால் பிஜேபிக்கு 6எம்பிக்கள் அதிகமாக கிடைத்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே உத்தரபிரதேசத்தில் பிஜேபி க்கு இருந்த 3 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி முடிந்த நிலையில் இப்பொழுது தேர்வான அதிகப்படியான 5 எம்பிக்களினாலும் உத்தர காண்டில் இருந்து புதிதாக 1
எம்பி பிஜேபிக்கு கிடைத்ததாலும் ராஜ்ய

சபாவில் பிஜேபிக்கு 92 எம்பிக்கள் இப்பொழுது இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக பிஜேபி கூட்டணிக்கு 119 எம்பிக்கள் இருக்கிறார்கள். 245 எம்பிக்கள் உடைய ராஜ்ய சபாவில் பிஜே பி கூட்டணி மெஜாரிட்டி பெற இன்னும் 4 எம்பிக்கள் வேண்டும்.இதற்கு பிஜூஜனதா தளம் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்று அறிவிக்கப்படாத கூட்டணி கட்சிகள் இருக்கின்றன.

அதனால் ராஜ்ய சபாவில் வழக்கம் போல் அனைத்து மசோதாக்களும் கண் மூடி கண் திறப்பதற்குள்ளுள் நிறை வேறிவிடும்.

அந்தோ பரிதாபமாக காங்கிரஸ் கட்சிக்கு இப்பொழுது உத்தரபிரதேச த்தில் 1 இழ ப்பு உத்தரகாண்ட்டில்1 இழப்பு என்று 2 எம்பிக்களை இழந்து 38 எம்பிக்கள் மட்டுமே இருக்கிறார்கள்.ஐயோ பாவம். கடந்த
2014-2019 பிஜேபி ஆட்சியில் ராஜ்ய சபாவை வைத்து மிரட்டி வந்த காங்கிரஸ் இப்பொழுது அமித்ஷாவினால் ராஜ்யசபாவா
அது எங்கே இருக்கிறது என்று கேட்கும் நிலைக்கு வந்து விட்டது.

புதியதாக தேர்வான ராஜ்யசபா எம்பிக்க ளுக்கு வாழ்த்துகள்..

கட்டுரை :- எழுத்தாளர் விஜயகுமார் அருணகிரி

Exit mobile version