அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி !

உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் தமிழகத்தில் நடந்த கொடுமை சிபிஐ விசாரிக்க வேண்டும்- அண்ணாமலை அதிரடி.

விழுப்புரம் மாவட்டம் குண்டலப்புலியூர் பகுதியில் அனுமதியின்றி பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அன்பு ஜோதி என்ற பெயரில் இயங்கி வந்த ஆசிரமத்தில் ஒருவர் காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அரசு அதிகாரிகள் சென்று விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் உண்மைகள் வெளியானதை தொடர்ந்து தமிழக அரசு தற்போது அந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் கெடார் போலீசார் அறக்கட்டளையின் நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதிஷ், கோபிநாத், பிஜீமேனன் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆசிரமத்திலிருந்து 15 பேர் காணாமல் போனதாகவும் உடல் உடல் உறுப்புகள் திருடப்பட்டுள்ளதாக புகார் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக டி ஐ ஜி பாண்டியன் தலைமையிலான 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தனிப்படையினர் பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அன்பு ஜோதி அறக்கட்டளை மூடப்பட்டுள்ளதால் இன்று அறக்கட்டளையின் மூடபட்ட 10 அறைகளின் பூட்டினை டி எஸ் பி பிரியதர்ஷினி மற்றும் வட்டாட்சியர் ஆதிசிவசக்திசிவகுமரிமன்னன் தலைமையிலானோர் ஆசிரமத்திலிருந்த 10 செல்போன்கள் மடிக்கணிணிகள், மாத்திரைகள் உள்ளிட்ட முக்கிய ஆவனங்களை கைப்பற்றி கெடார் காவல் நிலையம் எடுத்து சென்றனர்.


ஆசிரமத்தில் கைப்பற்றிய ஆவணங்களில் போலீசார் ஆசிரமத்தில் வளர்க்கபட்ட இரண்டு புறாக்களையும் எடுத்து சென்றுள்ளனர். அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக திருப்பூரை சார்ந்த அருண் தனது தாய் பத்மாவதி மற்றும் புதுச்சேரியை சார்ந்த நடராஜ் என்பவரை மீட்டு தரக்கோரி கெடார் காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளதால் போலீசார் திங்கள் கிழமை விழுப்புரம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தங்களது கஷ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். அன்பு ஜோதி அறக்கட்டளையின் உரிமையாளர் ஜீபின் பேபி மீது கோயம்புத்தூரில் உள்ள கொண்டாமுத்தூரில் இதே போன்று ஆசிரமம் கிளை நடத்தி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் மூன்று தினங்களுக்கு முன் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் உரிய விசாரணை திமுக அரசு நடத்தாது எனவும் சிபிஐக்கு இல்ல வழக்கினை மாற்ற வேண்டுமென தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவுக்கு அதிரடி கடிதம் ஒன்றினை எழுதி உள்ளார்

Exit mobile version