மத்திய அரசின் திட்டங்களை புறக்கணிக்கும் வங்கி மேலாளர் அனீஸ் பாத்திமா! களத்தில் இறங்கிய விஸ்வஹிந்து பரிஷத்

மத்திய அரசு ஏழைகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது இதில் மிக முக்கியமான திட்டம் விவசாயிகளுக்கான திட்டமாகும் வருடந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் திட்டம் இந்த திட்டமானது விவசாயிகளிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் முத்ரா வங்கி திட்டம் அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் தொழில் முனைவோருக்கான திட்டம் ஆயுஷ்மான் பாரத் என்னும் மருத்துவ திட்டம் என மக்களுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது முதியோர்களுக்காக அடல் பென்சன் யோஜனா திட்டம் குழந்தைகளுக்காக செல்வமகள் செல்வமகள் சேமிப்பு திட்டம் தேசிய ஓய்வூதிய திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் தீனதயாள் அந்தோதயா யோஜனா போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த திட்டங்கள் அனைத்தும் வங்கிகள் மூலமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றது . இந்த நிலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் வங்கிக்கு வரும் பொதுமக்களையும் மத்திய அரசின் அவதூறாக பேசி வருகிறார் இறச்சகுளம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் அனீஸ் பாத்திமா அவர் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது அங்கு செல்லும் வாடிக்கையாளர்களை சரியாக மதிப்பதில்லை சரியாக வழிநடத்துவது இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது இதன் காரணமாக இறச்சகுளம் ஸ்டேட் வங்கி மேலாளர் அனீஸ் பாத்திமாவை பணி நீக்கம் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது இதனை தொடர்ந்து இவ்விவகாரத்தில் விஸ்வ ஹிந்து பரிசத் களத்தில் இறங்கியுள்ளது அவர்கள் அனீஸ் பாத்திமாவை பணிநீக்கம் செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பிற்கு அப்போது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது ஆங்காங்கு போஸ்டர்களும் அடித்து ஒட்டப்பட்டது. இதுபோல் பல வங்கிகளில் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு போய் சேர்க்காமல் இழுத்து வருகின்றனர் . விவசாயிகளுக்கான 6000 ரூபாய் திட்டமானது போலி விவசாயிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது இதனை விசாரித்து பல அரசு அலுவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர் மத்திய அரசின் பல்வேறு மக்களுக்கான நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது மாநில அரசாங்கத்தின்வேலை ஆகும். ஆனால் அவ்வாறு நடந்துவிட்டால் மத்திய அரசிற்கு மக்களிடையே ஆதரவு கிடைக்கும் என்பதால் மாநில அரசு அலுவலர்கள் மத்திய அரசுக்கு எதிராக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பாதிக்கப்படுவது மக்களே.

Exit mobile version