தகுந்த ஆதாரங்களுடன் அண்ணாமலை-ஆளுநர் சந்திப்பு! ஆட்டம் காணும் ஆளும் தரப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து, மின் வாரியம் தனியார் நிறுவனத்திற்கு அளித்துள்ள ஒப்பந்தம் மற்றும் சட்டம் – ஒழுங்கு நிலைமை குறித்து, புகார் மனு அளித்துள்ளார்.

‘தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு, தமிழக மின் வாரியம், 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை, அனைத்து விதிகளையும் மீறி வழங்கி இருக்கிறது’ என்று சமீபத்தில், அண்ணாமலை புகார் தெரிவித்திருந்தார். இந்த ஒப்பந்தம் குறித்து இந்நிலையில், கிண்டி, ராஜ்பவனில் கவர்னர் ரவியை, நேற்று காலை அண்ணாமலை, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் சந்தித்து பேசினர்.

‘‘மின்சாரத்துறையில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருப்பது ஆளும் தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நஷ்டத்தில் இயங்கிவரும் பி.ஜி.ஆர் எனர்ஜி நிறுவனத்துக்கு தமிழக மின்சாரத்துறையில் 4,472 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான ஆணையை மார்ச் 10-ம் தேதி வழங்கினார்கள். இந்த நிறுவனம் முந்தைய தி.முக ஆட்சியில் மின்வாரியத்தில் கோலோச்சிய நிறுவனம் என்கிறார்கள்.

நிறுவன தரப்பும், ஊர்ப் பெயரை அடைமொழியாகக்கொண்ட அப்போதைய மூத்த அமைச்சர் ஒருவரும் உறவுக்காரர் என்பதால், அந்த நிறுவனத்துக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, நிறுவனத்தின் செயல்பாடுகள் சுருங்கிவிட்டன. ஒருகட்டத்தில் அந்த நிறுவனத்தை மின்சார வாரியமே பிளாக் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டது. அந்த நிறுவனம்தான் தற்போது, மின்வாரியத்தில் 442 கோடி ரூபாய் வைப்புத்தொகையைச் செலுத்தி, இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை எடுத்துள்ளது என்கிறார் அண்ணாமலை. அதோடு ‘தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை எதற்காகக் கொடுத்தார்கள்? இதற்குப் பின்னால் கோபாலபுரம் குடும்பம் உள்ளது’ என்று அண்ணாமலை கூறியதுதான் முதல்வரைக் கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தில் மாண்புமிகு ஒருவரும், மேலிடத்து உறவினர் ஒருவரும் முதலீடு செய்திருப்பது தனிக்கதை!”

‘‘கடந்த மாதம் வரை பி.ஜி.ஆர் குழுமத்தின் ஷேர் மதிப்பு அறுபது ரூபாய் என்ற அளவில் இருந்துள்ளது. இந்த ஒப்பந்தம் பெறப்பட்ட பிறகு ஒரே நாளில் ஷேரின் மதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. இந்த உயர்வுக்கு முன்பாக அந்த நிறுவனத்தின் ஷேரில் சிலர் பெரும் தொகையை முதலீடு செய்திருக்கிறார்கள். ஷேர் மதிப்பு உயரப்போகிறது என்பதை அறிந்தே இந்த முதலீடும் நடந்துள்ளது. இதையெல்லாம் ஷேர் விவகாரங்களைக் கண்காணிக்கும் செபி அமைப்பு, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகுதான் அண்ணாமலை இந்த விவகாரத்தைக் கையிலெடுத்திருக்கிறார். முதலீடு செய்தவர்கள் மேலிடத்துக்கு நெருக்கமானவர்கள் என்பதால், விரைவில் விவகாரம் வெடிக்கலாம் என்கிறார்கள்.’’

ஒருபக்கம் ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்திக்கொண்டே மறுபக்கம் நாடாளுமன்றத்தில் ‘ஆளுநரை மாற்ற வேண்டும்’ என்று தி.மு.க கோஷமிட்டது ஆளுநரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுகவை பற்றி அண்ணாமலை ஆளுநரை சந்தித்து திமுக அரசின் அவலங்களை புகாராக கூறியுள்ளார். இனி ஆளுநர் தனது வேலையை காட்ட தொடங்குவார்,திமுகவின் முக்கிய அமைச்சர்கள் சிக்கலாம் என்ற செய்திகள் வெளிவருகிறது.,

Exit mobile version