லடாக் எல்லையில் ஆவடி ! களம் புகுந்த தமிழர்கள்!

நம் தமிழகத்தில் சென்னையில் உள்ள ஆவடி குறித்து நம்மில் பலரும் சரியாக அறிந்து இருப்பது இல்லை. ஆவடி என்பது,Armored Vehicles and Ammunition Depot of India AVADI ஆங்கில முதல் எழுத்துக்கள் கொண்ட பெயர் வடிவம் அது. இது இன்று உலகில் அதிநவீன, அதிக எடை கொண்ட பீரங்கிகளை தயாரித்து சாதனை புரிந்திருக்கும் விஷயம் கூட நம்மில் பலருக்கும் இன்று வரை தெரியாது.

ஒரு நாள் இரண்டு நாள் அல்ல இது 1972 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு,2001 ஆண்டு தூசு தட்டப்பட்டு,2002 ஒப்புதல் அளிக்கப்பட்ட மிக மிக நீண்ட திட்டமத்தின் செயல் வடிவம் தான் அர்ஜுன் மாக்1 மற்றும் அதனிலும் மேம்பட்ட மாக் 2 பீரங்கிகள்.இது முழுக்க முழுக்க நமது நாட்டில் DRDOவால் வடிவமைக்கப்பட்ட பீரங்கிகள் இவை. இந்த இடத்தில் மற்றோர் விஷேசம், இங்கு தான் டி90 எனும் பீஷ்ம பீரங்கிகளும் தயாரிக்க படுகிறது. இவை ரஷ்ய கூட்டு தயாரிப்பு.

இந்த ரக பீரங்கிகள் வாங்க கடந்த கால காங்கிரஸ் அரசு சுமார் 7 வருட காலம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தங்கள் போடப்பட்ட அனைத்தையுமே தற்போது உள்ள பாஜக அரசால் கடந்த 2016 ஆம் ஆண்டு நிராகரிக்கப்பட்டு அவைகளை இங்கு இந்தியாவில் வைத்து தயாரிக்கும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் பெரும் அளவிலான பணம் மிச்சமானதுடன் தயாரிப்புக்கு பிந்தைய சேவைகளில் கணிசமான அளவிற்கு பணம் குறைந்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க நமது ராணுவ தேவைகளுக்கு போக மீதமுள்ளவற்றை விற்பனை செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒன்றை குறிப்பிட வேண்டும், சீனாவும் அந்த சமயத்தில் ரஷ்ய தயாரிப்பு அர்மடா பீரங்கிகள் வாங்க ஆர்வம் காட்டியது. ஒன்றல்ல இரண்டல்ல சற்றேறக்குறைய 740 பீரங்கிகள் வாங்க போவதாக சொல்லி அவைகளின் தரம் மற்றும் கையாளுதல் குறித்து அறிய இரண்டு பீரங்கிகள் தர முடியுமா என்று ரஷ்யாவிடம் கேட்டது. ரஷ்யாவும் தந்தது. பிறகு என்ன நடந்திருக்கும் என்று யூகித்து இருப்பீர்களே

இன்று நம் ராணுவத்திடம் சுமார் 4200 பீரங்கிகள் இருக்கின்றன. சீனாவில் சுமார் 3800 மாத்திரமே உள்ளன. அதில் பலவும் இலகு ரகம். நமது பிரதமரின் கவனம் எல்லாம் அப்போது குஜராத் மாநிலத்தில் L&T நிறுவன தயாரிப்பில் உருவான K9 ரகத்தை சேர்ந்த வஜ்ரா பீரங்கிகள் மீது தான் ஆர்வம் இருந்தது. அந்த சமயத்தில் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் தான் ராணுவ அமைச்சர்,அவரே இந்த ரக பிரங்கிகளை பற்றி சொல்லி ரஷ்ய கூட்டு தயாரிப்பில் பீஷ்ம பீரங்கிகளும், நம் சொந்த DRDO வடிவமைப்பில் அர்ஜுன் ரக பீரங்கிகள் என ஏக காலத்தில் ஆவடியில் தயாரிக்க ஆவண செய்தார்.

நிலைமை இவ்வாறு இருக்க இவ்வாண்டு ஜுன் மாதத்தில் ரஷ்யாவில் நடைபெற்ற உலக நாடுகளின் பீரங்கி அணிவகுப்பு மற்றும் செயல்திறன் விளக்க நிகழ்ச்சியில் நமது இந்திய ராணுவத்தினர் கையாண்ட இந்த ரக பீரங்கிகள் உலகளவில் முதல் இடத்தை பிடித்தது.

நிறைய மாறுதல்களை உண்டு பண்ணியிருக்கிறார்கள்.பிரங்கி இயக்க வெகு சுலபமாக அதேசமயம் மிகுந்த செயல் திறன் வெளிப்படும் வகையில் மாற்றி உள்ளனர். சுருங்க சொன்னால் மிகப்பெரிய தண்ணீர் லாரி ஒன்றினை டாட்டா சுமோ போன்று இயங்கும் அளவில் மாற்றிவிட்டனர். பீரங்கியின் அந்த பிரத்யேக சக்கரங்களை கொண்ட இரும்பு பட்டையில் அதிக அழுத்தத்தை தாங்கும் துண்டு துண்டான ரப்பர்கள் பொருத்தி மிக சுலபமாக அதேசமயம் மிகுந்த பாதுகாப்புடன் பயணிக்கும் படியாக செய்திருக்கிறார்கள்.

இன்று லடாக் பகுதியில் உள்ள சூழ்நிலையில் நமது ராணுவ தரப்பு இந்த ரக பீரங்கிகளையே களம் இறக்கியுள்ளனர். இதற்கு சமமான பீரங்கிகள் சீன வசம் இல்லை. அதுபோக அவர்கள் வசம் உள்ள பீரங்கிகள் 28° சாய் கோணத்தில் ஏற-இறங்க தடுமாறி கொண்டு இருக்க நமது பீரங்கிகள் 45° கோணத்தில் சர்வ சாதாரணமாக ஏறி இறங்கி கொண்டு இருக்கிறது. வரவிருக்கும் உறைபனி குளிர்காலத்தில் அவர்கள் வசம் உள்ள பீரங்கிகளின் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கே சந்தேகமாகவே இருக்கிறது.ஆனால் நம் பீரங்கிகள் பிரத்யேக வடிவமைப்பு,ரஷ்யா உறைபனி மிகுந்த சைப்ரஸிஸ் பயன்படுத்தியவை. இதில் நம்மவர்கள் வேறு பலவிதமான மேம்படுத்தல்களை செய்து வைத்திருக்கிறார்கள். கேட்கவா வேண்டும்.

இப்போது எல்லையில் உள்ள பீரங்கிகளை பராமரிக்க மற்றும் கால சூழல் குறித்து நேரிடையாக அறிந்து கொள்ளவும் ஆவடி தொழில்நுட்ப பிரிவினரை லடாக்கிற்கு வரவழைத்திருந்தனர். பகுதி பகுதியாக சென்று வர மத்திய அரசும் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இது நடைமுறையில் வந்த இரண்டு வாரத்தில் அங்குஏற்கனவே இருந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரை கலந்து கொண்டு வேறு ஒரு விஷயத்தை புதிதாக முயற்சிக்க முடிவு செய்து இருக்கிறார்கள்., நம்மவர்கள்.

அது தான் AI, artificial intelligence என்று சொல்லக் கூடிய தொழில்நுட்பம்.

உதாரணத்திற்கு முப்பது முதல் ஐம்பது வரை உள்ள பீரங்கிகள் தொகுப்பில் அவற்றினை தொழில்நுட்ப பண்புகள் மூலமாக ஒன்றிணைத்து ஒரே ஒரு கட்டளையில் இயங்கும் சாத்திய கூறுகளை ஆராய்கிறது இந்த AI.இன்னும் சரியாக சொன்னால் எதிரியின் இலக்கில் துல்லியமாக தாக்கக்கூடிய தனது பீரங்கி தொகுப்பில் உள்ள பீரங்கி இயங்கி தன் கோணத்தில் இருந்து தானாகவே குண்டினை நேரிடையாக செலுத்தி இலக்கை தாக்கும். இதனால் ஓரே சமயத்தில் பல பீரங்கிகளின் இருந்து ஓரே இலக்கை தாக்குதல் நடப்பது கட்டுபடுத்த பட்டு குண்டு விரயம் தடுக்கப்படும்.

அதேசமயம் ஒரே சமயத்தில் பல இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்த துல்லியமாக தாக்கக்கூடிய கோணத்தில் எந்த பீரங்கி உள்ளதோ அந்த பீரங்கி தானாகவே இயங்கும் வண்ணம் இந்த தொழில்நுட்பம் இருக்கும். இது தற்சமயம் உலக அளவில் புதுமையான ஒன்று.

எதிரி நாட்டின் எல்லையில் உள்ள பீரங்கிகள் அணைத்து யுத்த காலத்தில் ஒரே நேரத்தில் ஒரே நேர்கோட்டில் இருக்காது.அந்த சமயத்தில் இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இலக்கு நிர்ணயம் கூட வெளியே இருந்து அனுப்பிட முடியும். இதன் அர்த்தம் வானில் இருந்து கண்காணிப்பு ட்ரோன்கள் மூலம் பெறப்படும் தரவுகளுக்கு ஏற்ப தானாகவே அருகில் உள்ள பீரங்கிகள் செயல்படும். தரைப்படை ராணுவ நகர்வில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மிகப் பெரிய பலம் ஏற்படும் இதனால்.

இப்படி ஓர் அனுகூல பலன் தரும் நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் நமது ராணுவம் ஓரே நாளில் எதிரி தேசத்தில் சுமார் 50-80 கிலோமீட்டர் வரை முன்னேறுவது இனி சாத்தியமே. இன்று இஃது 30-45 கிலோமீட்டர் எனும் அளவில் உள்ளது.

எமகாதகர்கள் இவர்கள் என்று பிரதமர் வாய் விட்டு வாழ்த்தி இருக்கிறார். போனது பராமரிப்பு பணிக்காக. ஆனால் அங்கு உள்ள நம்மவர்களுடன் கலந்து ஓர் புதிய பரிமாணத்தை அதற்கு ஏற்படுத்தி கொடுத்து விட்டனர்.

இனி வரவிருக்கும் நாட்களில் கல்வி கற்கும் காலத்திலிருந்தே இது போன்ற பரிட்சார்த்தமான விஷயங்களில் வளரும் தலைமுறையினரை இது போன்ற அனைத்து துறைகளிலும் ஈடுபடுத்த முடியுமா என்று மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் உள்ளன. புனித பயணமாக செல்பவர்களுக்கு மானியம் தருவது போல் இத்திட்டத்திற்கும் மானிய அடிப்படையிலோ அல்லது துறை சார்ந்த திட்டமாக அதாவது ப்ராஜெக்ட் அளவிலான திட்டமாக இதனை செயல் படுத்த உத்தேசித்து வருவதாக கேள்வி.

வளமான வலிமையான பாரதம் இதோ நம் கண் முன்னே உருக்கொண்டு வருகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Exit mobile version