வங்கிகள் பாதுகாப்பானது தானா ?

“வங்கிகள் பாதுகாப்பானது தானா? வங்கித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனுபவஸ்த்தர் திரு. Murali Seetharaman சார் அவர்கள் சுருக்கமாக விளக்கியிருக்கிறார். “வலதுசாரி சிந்தனையாளர் ஆனந்தன் அமிர்தன் .

New Bank of India – 1980ல் தேசீயமயமாக்கப் பட்டது.
வங்கிகள் தேசீயமயம் 1969 ல் – 14 வங்கிகள்!
அதன்பிறகு 6 வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டன 1980 ல்!

அதில் ஒன்று NEW BANK OF INDIA!

ஆனால் அப்படி தேசியமயமாக்கப் பட்ட “பொதுத் துறை” வங்கியே செயல்பட முடியாமல் 1993 ல் PUNJAB NATIONAL BANK உடன் இணைக்கப்பட்டது!
அப்போது பொருளாதார “மாமேதை” மன்மோகன் சிங் நிதி அமைச்சர்!

அப்போதென்ன NEW BANK OF INDIA வில் மக்கள் போட்ட பணம் காலி ஆனதா?

LAKSHMI COMMERCIAL BANK திவாலாகி, கனரா பேங்குடன் இணைந்ததே, அதில் போட்ட டெபாசிட்கள் காணாமலா போனது?
பிறகு 90 களில் சுத்த சுயம்பிரகாசமான காங்கிரஸ் ஆட்சிகளில்…

BANK OF TAMILNADU திவாலாகி INDIAN OVERSEAS BANK உடன் இணைக்கப்பட்டது!

BANK OF THANHAVUR செயல்பட முடியாமல் INDIAN BANK உடன் இணைக்கப்பட்டது.

அப்போதெல்லாம் அந்தத் தனியார் வங்கிகளில் போடப்பட்ட மக்கள் பணம் காலியானதா?

சென்ற UPA அரசில் GLOBAL TRUST BANK என்ற புதிய தலைமுறை தனியார் வங்கி திவாலானது!
அதன் தலைவர் ரமேஷ் கெல்லி என்பவருக்கு ‘வங்கித் துறையில் சிறப்பாகப் பணி புரிந்ததற்கு’ பத்ம விருது கொடுத்து கௌரவித்தது மத்திய அரசு!

அந்த GLOBAL TRUST BANK ஐ அப்படியே பொதுத்துறை வங்கியான ORIENTAL BANK OF COMMERCE ஏற்றுக் கொண்டதே?
அப்போது என்ன GLOBAL TRUST BANK ல் போட்டவர்களின் பணம் காலியாகவா ஆயிற்று?

தனியார் துறை வங்கிகளோ, அல்லது பொதுத் துறை வங்கிகளோ, செயல்பட முடியாமல் வேறொரு வங்கியுடன் இணைக்கப்படும் போது, டெபாசிட்தாரர்களின் பணம் பாதுகாக்கப் பட்டது என்பதே வரலாறு!

பாண்டியன் வங்கியைக் கனரா வங்கி தன்னுடன் இணைத்துக் கொண்ட போது கூட பாண்டியன் வங்கியில் போட்டவர்களின் பணத்துக்கு கனரா வங்கி பாதுகாப்புத் தந்தது!

BHARAT OVERSEAS BANK LTD என்ற தனியார் வங்கி IOB யுடன் இணைக்கப்பட்ட போது மோடியா பிரதமர்?
ஆனால் இப்போது YES BANK செயல்பட முடியாமல் போய், SBI அதை ஏற்கும்போது மட்டும்…

ஏதோ அதில் மக்கள் போட்ட பணம் மாயமாகி விட்டது போலவும், மோடிதான் அவர்கள் காசை எல்லாம் ஆட்டையைப் போட்டது போலவும், கூச்சலிடுவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்! இதில் சில முன்னாள் வங்கி ஊழியர்களும்…

கடந்த காலத்தில் நடைபெற்ற – குறிப்பாக காங்கிரஸ், UPA ஆட்சிக் காலங்களில் நடைபெற்ற – தனியார் வங்கி / பொதுத்துறை வங்கி நொடிப்புகள் அவற்றை வேறொரு வங்கியுடன் இணைத்தது…

இவற்றை வேண்டுமென்றே திட்டமிட்டு சில முன்னாள் வங்கி ஊழியர்கள் மறைத்து மோடி வெறுப்புப் பிரசாரம் செய்வது அயோக்கியத்தனம்!

‘பொறுப்புள்ள தொழிற்சங்கம்’- எனப் பீற்றிக் கொள்பவர்கள் மக்களின் அச்சத்தைக் களைய வேண்டும்!

அதிலும் சில தனி நபர் பதிவுகள் திட்டமிட்டே மக்களிடம் – வங்கிகளிலிருந்து உங்கள் பணத்தை எடுத்து விடுங்கள் என்று – பீதியைக் கிளப்புகின்றன.

இவர்களை அடையாளம் கண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Exit mobile version