பங்க் கடைகளில் பங்கு..? எழும்பூர் தி.மு.க எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு – பாஜக வினோஜ்செல்வம் பகீர் தகவல்..!

எழும்பூர் திமு.க எம்எல்ஏ பரந்தாமன் குறித்து பகீர் தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர்.

ஸ்வீட் பாக்ஸ் ஊழல், மின்சார ஊழல், என்று ஆளும் தி.மு.க அரசு மீது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பல குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவது மட்டுமில்லாமல் அதற்குறிய ஆதாரத்தினையும் நாட்டு மக்கள் முன்பு தொடர்ந்து சமர்பித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல பத்திரிக்கையான குமுதம் ரிப்போர்ட்டர் எழும்பூர் தி.மு.க எம்எல்ஏ பரந்தாமன் பற்றி பகீர் கட்டுரை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. இது குறித்த பதிவினை தமிழக பா.ஜ.க இளைஞர்கள் அணி தலைவர் வினோஜ் செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிட்டு உள்ளார்.

வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்தது போல, வாக்களித்த மக்களிடம் வசூல் வேட்டையை எழும்பூர் தி.மு.க. எம்.எல்.ஏ. பரந்தாமன் தொடங்கிவிட்டார்
என்ற செய்தி அனலடிக்கிறது. சென்னை மாநகரின் ஹார்ட் ஆஃப் சிட்டியில் அமைந்துள்ள தொகுதி எழும்பூர், 1977ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில், இதுவரை நடைபெற்ற 11 சட்டமன்றத் தேர்தல்களில் 9 முறை திமுகவும். காங்கிரஸ், தேமுதிக, தலா ஒரு முறையும் கைப்பற்றியுள்ளன.


தனித் தொகுதியான எழும்பூரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் பரந்தாமனும் இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் ஜான்பாண்டியனும் களமிறக்கப்பட்டனர். இந்த தேர்தலில் ஜான்பாண்டியனைவிட பரந்தாமன் 38 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று எளிதாக
வெற்றி பெற்றார்.


கொரோனா அலையின் போது பொதுமக்களுடன் நின்றார் பரந்தாமன் இவர் மூலமாக தொகுதிக்கு விடியல் கிடைக்கப்போகிறது என்றுதான் மக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் இந்த நேரத்தில் தான் எழும்பூர் தொகுதியில் அமைந்துள்ள 130 பங்க் கடைகளில், தனக்கு பங்கு வேண்டும் என எழும்பூர் பகுதி திமுக செயலாளர் மூலம் வசூல் வேட்டையைத் தொடங்கிவிட்டார் என்று புகார் எழுந்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சாலையோரங்களில் பங்க் கடைகள் அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையம், ராஜரத்தினம் ஸ்டேடியம் என பல பகுதிகளில் பங்க் கடை செயல்பட்டு வருகிறது. இந்த பங்க் கடைகளில்தான் வசூல் வேட்டை நடப்பதாகப் புகார்.


இதுகுறித்து பங்க் உரிமையாளர் ஜெ.சாகுல் ஹமீதிடம் பேசினோம். “நான் புதுப்பேட்டை பகுதி திருவேங்கடம் தெருவில் வசித்து வருகிறேன். எனது தந்தை ஜின்னா எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை வாசலில் பல ஆண்டுகளாக பங்க் கடை நடத்தி வருகிறார். எனது தந்தைக்கு உதவியாக நானும் இந்த
கடையில்தான் வேலை செய்து வருகிறேன். இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு எந்த கட்சியின் மூலமும், எந்த அதிகாரியின் மூலமும் சிறு பிரச்னையும் வந்தது இல்லை.

சமீபத்தில் எழும்பூரில் உள்ள பங்க் கடைக்காரர்களை தி.மு.க. பகுதிச் செயலாளர் ஜெ.விஜயகுமார் மற்றும் முன்னாள் வட்டச் செயலாளர் ரபீக் ஆகியோர்
அழைத்து மீட்டிங் போட்டனர். அப்போது, ‘பங்க் கடை வைத்திருப்பவர்கள் தலா 5 லட்ச ரூபாய் தரவேண்டும். அப்படி பணம் தரமுடியவில்லை என்றால் தொடர்ந்து கடை நடத்த முடியாது என தெரிவித்தனர். நாங்கள் தொடர்ந்து தொழில் செய்ய வேண்டும் என்ற அச்சத்தால், பங்க் கடை வைத்திருக்கும் நபர்கள்

அனைவரும்,அவரவர்களால் முடிந்த தொகையை புரட்டிக் கொடுத்தோம். அந்த வகையில் நானும் 1 லட்சம் ரூபாயைக் கொடுத்தேன் ஆனால் நாங்கள் கொடுத்த பணம் போதாது என தி.மு.க. நிர்வாகிகள் எங்களை தொல்லை செய்தனர். இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான நாங்கள் எங்கள் தொகுதி எம் எல் ஏ வான பரந்தாமனை சந்தித்து முறையிட்டோம் நியாயம் கிடைக்கும் என எம்.எல்.ஏ.வை சந்திக்கச் சென்ற எங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.


ஆம், ஓட்டு போட்ட எங்களுக்கு சாதகமாக பேச வேண்டிய எம்எல்ஏ. திமுக நிர்வாகிகளுக்கு சாதகமாக பேசினார்.மேலும், அவர்கள் கேட்கும் பணத்தை
தரும்படி எங்களிடம் தெரிவித்தார் ‘என்னால் பணம் தரமுடியாது’ என தெரிவித்து வந்துவிட்டேன். என்னைப் போன்று ஒருசிலர், ‘பணம் தர முடியாது
என்று தெரிவித்தனர். ஒருசிலர், பணத்தைக் கொடுக்க கால அவகாசம் கேட்டு திரும்பினார்கள்.

இதையடுத்து, பணம் தர சம்மதிக்காத பங்க் கடைகளுக்கு அருகே புதிதாக ஒரு பங்க்கை பரந்தாமன் இறக்கி வைத்துள்ளார். எனவே பயந்து போன நாங்கள் இது தொடர்பாக முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு புகார் மனு அளித்துள்ளோம். ஆனால், இதுவரை எங்கள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை. இத்தனைக்கும் நாங்கள் கடையை காலம்காலமாக கடை நடத்த முடியாது தி மு க வின் வெற்றிக்காக உழைத்த வர்கள் எங்களுடைய ஆட்சியில், எங்களுக்கே இந்த நிலையா என்பதுதான் வேதனையாக இருக்கிறது’ என்று புலம்பினார். பணம் கொடுக்காத பங்க் கடை உரிமையாளர்களுக்கு ரமேஷ் எனும் திமுக நிர்வாகி, எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன் பெயரைச் சொல்லி மிரட்டும் ஆடியோ ஒன்றும் வைரலாகியுள்ளது.

விமல் என்பவரை தொலைபேசியில் மிரட்டும் ஆடியோவை கேட்டோம். எழும்பூர் தொகுதியில் அமைந்துள்ள இ-சேவை மையத்திற்கு பக்கத்தில்
கடை வைத்திருப்பவர் விமல், அவர், அந்த கடையை வேறு ஒருவருக்குக் கொடுப்பதற்கு அட்வான்ஸ் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில்தான் மிரட்டல்
வந்துள்ளது.அந்த ஆடியோவில் பேசும் ரமேஷ், அந்த தி மு.க. பகுதிச் செயலாளருக்கு உடனடியாகக் கொடுத்துவிட வேண்டும். நீ வேறு
யாரிடமாவது அட்வான்ஸ் வாங்கியிருக்கிறாய் என்றால், அதனை உடளே திருப்பிக் கொடுத்துவிடு,இல்லையென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். தொகுதி எம்.எல்.ஏ., பகுதிச் செயலாளரை மீறி இங்கு எதையும் செய்துவிட முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார். பங்க் கடை
ரமேஷ் மட்டுமின்றி புதிதாக கட்டப்படும் வீடுகள், கடைகளிலும் இதுபோல் வசூல் வேட்டை நடப்பதாக புகார் கூறப்படுகிறது.


பரந்தாமன் மீது வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜயகுமார் விளக்கம் கேட்டோம்
பங்க் கடைக்காரர்கள் முதல்வர் தனிப் பிரிவில் அளித்திருக்கும் புகார் குறித்தும், ஆடியோ மிரட்டல் குறித்தும் கேட்டோம். நாம் கூறியதை முழுமையாக
கேட்டுக்கொண்டவர். அப்படி எதுவும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. இதுகுறித்து போனில் பேசுவது சரியாக இருக்காது. வேண்டுமானால் நேரில் வாருங்கள் என்று நழுவினார்.

என குமுதம் ரிப்போட்டர் புத்தகத்தில் செய்தியாக வந்துள்ளது.

Exit mobile version