கட்சியை பலப்படுத்த மகளிரை களத்தில் இறக்கும் அண்ணாமலை ! இந்த திட்டம் கைகொடுக்குமா ?

பா.ஜ., மாநில மகளிரணி மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகக் கூட்டம், கோவையில் நேற்று நடந்தது. மகளிரணி மாநில தலைவர் உமாரதி ராஜன் தலைமை வகித்தார்.

மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ”கட்சியில் மகளிரணியின் பங்கு முக்கியமானது. வரும் தேர்தல்களில் நமது செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என, திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. வேட்பாளர்களாக நின்று, மக்கள் பிரதிநிதிகளாக வெல்லலாம். மத்திய பா.ஜ., அரசின் திட்டங்கள் எல்லோரையும் சென்றடைந்துள்ளன. திட்ட பயனாளிகளாக உள்ள பெண்களை சந்தித்து, அரசின் சாதனைகளை விளக்க வேண்டும். பயனாளிகளுக்கு உரிய திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

தேசிய மகளிர் அணி தலைவர் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் நளினி, விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில மகளிரணி துணைத்தலைவர் வத்சலா, செயலாளர் சுதாமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Exit mobile version