நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகளிலும் பா.ஜனதா கட்சி கொடியேற்று நிகழ்ச்சியில் கட்சியின் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
மத்திய அரசு அறிவித்துள்ள மும்மொழி கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்று ஆதரவு அளிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கையை வைத்து விட்டு தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழி கொள்கையை பின்பற்றினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே மும்மொழி கல்வி கொள்கை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இல்லையென்றால் பா.ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கி உள்ளதால் பல கோடி இந்துக்களின் மனதில் இருந்த வேதனை நீங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்பார்த்த ராமர் கோவிலுக்கு பாரத பிரதமர் அடிக்கல் நாட்டி,நாட்டின் மிக பெரிய ஆளுமையென்பதை நிரூபித்தி உள்ளார். இது பலரின் உயிர் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி.பா.ஜனதா கட்சி வெளிநாடுகளில் கூட ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. பலம் வாய்ந்த கட்சியாக திகழும் பா.ஜனதாவை யாராலும் வீழ்த்த முடியாது எனவும் பா.ஜனதா மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் நேதாஜி, கல்வி பிரிவு செயலாளர் கார்த்திகேயன், பொதுச்செயலாளர் ராஜேந்திரகுமார், மகளிர் அணி நிர்வாகி ஜீவஜோதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திமுக வில் வாரிசு அரசியலைத் தொடர்ந்து குடும்ப அரசியலையும் தாண்டி உதயநிதி ஸ்டாலின் கை ஓங்கி இருப்பதால் மூத்த தலைவர்கள் விரக்தியில் உள்ளார்கள். இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடத்திவரும் பிரதமர் மோடி அவர்களின் ஆளுமையால் சமீபத்தில் விபி துரைசாமி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து இருந்தார். முதன் முறையாக தற்போது ஒரு சிட்டிங் திமுக எம்.எல்.ஏவான குக செல்வம் திமுக லிருந்து விலகி உள்ள நிலையில் ,தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் பா.ஜனதாவில் இணைய தயாராக இருக்கிறார்கள்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















