மணிப்பூரில் மீண்டும் மண்ணை கவ்வியது காங்கிரஸ் !பா.ஜனதா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

மணிப்பூரில் பாரதிய ஜனதா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது பிரேன் சிங் தலைமையிலான பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவாக 28 ஓட்டுக்கள் கிடைத்து உள்ளது.இதில் பிஜேபி-17 நேசனல்
பீப்பிள் பார்ட்டி-4 நாகலாந்து பீப்பிள் ப்ரண்ட்-4 லோக்ஜனதா பார்ட்டி-1 திரிணா முல் காங்கிரஸ்-1லோக்ஜனதா சுயேச் சை-1 என்று 28 ஓட்டுக்கள் கிடைத்து இருக்கிறது.சபாநாயகர் ஓட்டு போடும் சூழ்நிலை தேவைப்படாததால் அவர் வாக்கெடுப்பில் பங்கு பெற்று இருக்க மாட்டார்.இருந்தாலும் அவர் பாஜகவை சார்ந்தவர் என்பதால் மொத்தமாக பாஜக கூட்டணிக்கு29 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.


ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் நடை பெற்ற ராஜ்யசபா தேர்தலின் பொழுது மணிப்பூரில் ராஜ்யசபா சீட்டை பெறுவதோடு பாஜக ஆட்சியையும் கலைத்து விடுவதற்கும் காங்கிரஸ் வரிந்து கட்டி
நின்றது. பாஜக கூட்டணியில் இருந்து என்பிபி கட்சியின் 4 எம்எல்ஏக்களை இழுத்தது அடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியி ன் 1 எம்எல்ஏவையும் இழுத்து 33 எம்எ ல்ஏக்களின் ஆதரவோடு கவர்னரை சந
தித்து ஆட்சி அமைக்க கடிதம் கொடுத்து காத்து இருந்தது.

இந்த நேரத்தில் பிஜேபியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவி ஆட்சி கவிழ்வதை உறுதி செய்தார்கள் ஆக பாஜக ராஜ்யசபா சீட்டையும் இழப்பதோடு ஆட்சியையும் இழக்கும் என்கிற நிலையே மணிப்பூரில் ஜூன் மாதத்தில் இருந்தது. ஆனால் பிஜேபி காங்கிரசின் கனவை காலி செய்து மணிப்பூரின் ஒரே ஒரு ராஜ்யசபா சீட்டை கைப்பற்றியதோடு ஆட்சியையும் தக்கவைத்துக் கொண்டது.ஆட்சிக்கு எதிராக திரும்பிய என்பிபி மற்றும்திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் பிஜேபி கூட்டணிக்கு வந்ததால் ராஜ்யசபா சபா தேர்தலில் பிஜேபிக்கு 28 ஓட்டுக்கள் கிடைத்தது .காங்கிரஸ் கட்சிக்கு 24 ஓட்டுக்கள் தான் கிடைத்தது.

ராஜ்யசபா தேர்தலை ஒட்டி நடைபெற்ற குதிரை பேர அரசியலில் பிஜேபியில் இருந்து 3 எம்எ ல்ஏக்கள் காங்கிரசில் சேர்ந்ததால் அவர்களின் எம்எ ல்ஏ பதவியும் காங்கிரஸ்கட்சியில் இருந்து 4 எம்எல்ஏக்கள் பிஜேபியில் சேர்ந்ததால் அவர்களின் எம்எல்ஏ பதவி என்று மொத்தமாக 7 இடங்கள் காலியாகி விட்டது மணிப்பூர் சட்டமன்றத்தில் மொத்தம் உ ள்ள 60 உறுப்பினர்களில் 7 எம்எல்ஏக்கள் அவுட் என்பதால் இப்பொழுது உள்ள 53 உறுப்பினர்களில் 28 உறுப்பினர்களி ன் ஆதரவுடன் பிஜேபி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இருக்கிறது ஆட்சிக்கு எதிராக 16 ஓட்டுக்கள் மட்டுமே கிடைத்ததால் 12 வாக்குகள் வித்தியாச த்தில் பிஜேபி அரசு வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்எல்ஏக்கள் இ ருந்தார்கள்.இதில் 16 எம்எல்ஏக்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொண்டார்கள் .8 எம்எல்ஏக்கள் ஓட்டெடுப்பில் கல ந்து. கொள்ள வில்லை .இந்த 8 எம்எல்ஏக்களில் இது வரை 6 எம் எல்ஏக்கள் தங்களின் எம்எல்ஏ பதவிக ளை ராஜினாமா செய்து விட்டார்கள்.ஐ யோ பாவம் பிஜேபி ஆட்சியை கவிழ்க்க ஆள் திரட்டி ராஜ்யசபா தேர்தலில் 4 எம்எல்ஏக்களை இழந்தார்கள். இப்பொழுது பிஜேபி அரசு கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமாக மறுபடியும் 8 எம்எல்ஏக்களை இழந்து இருக்கிறார்கள். இப்பொழுது 15 இடங்கள் காலியாகி விட்டது.இடை தேர்தல் நடைபெறும் பொழு து இதில் எப்படியாவது 10 இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றாலே போதும்பிஜேபி மெஜாரிட்டியை அடைந்து விடும்அதோடு இன்னொரு 10 வருசத்தில் காங்கிரஸ் கட்சியை மணிப்பூரில் இருந்து காணாமல் செய்து விடலாம்.

Exit mobile version