தி.மு.கவிற்கு பா.ஜ.க தான் எதிரி! தி.மு.க.வில் மூன்று முதல்வர்கள் உள்ளது தான் அதன் சித்தாந்தம் – அதிரடி அண்ணாமலை!

பா.ஜ.க மாநில தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலை அவர்கள் நேற்று சேலம் மற்றும் மதுரைக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். பா.ஜ.க முன்னாள் பொது செயலாளர் பயங்கரவாதிகளால் வெட்டி கொல்லப்பட்ட ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு சேலத்தில் உள்ள ஆடிட்டர் ரமேஷ் அவர்க்ளின் வீட்டிற்கு நேரில் அவர்களின் குடும்பத்தரிடம் இரங்கலை தெரிவித்து கொண்டார்.

திரு. ஆடிட்டர் ரமேஷ் ஜி அவர்களின் திருஉருவ படத்திற்கு மரவனேரியில் அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.மேலும் பாரதிய ஜனதா கட்சி சேலம் மாவட்ட இளைஞர் அணி சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்ததானம் வழங்கினார் அண்ணாமலை. அடுத்து மதுரை புறப்பட்ட அண்ணமலை பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராமா சீனிவாசன் அவர்களின் இல்லத்திற்கு சென்று அவரது தந்தை மறைவிற்கு இரங்கலை தெரிவித்துக்கொண்டார்

பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்கள் பா.ஜ.க மூத்த தலைவர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க மத்திய சட்ட அமைச்சரிடம் வலியுறுத்துவோம். பா.ஜ.க ஆட்சியில் கலவரம் குண்டுவெடிப்பு மத மோதல் முற்றிலும் குறைந்துள்ளது. மேகதாது விவகாரத்தில் பக்கத்து மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி இருந்தாலும் கூட விவசாயிகளுக்காக தமிழக பா.ஜ.க எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.5 குறைப்பேன் என தி.மு.க. வாக்குறுதி அளிக்கபட்டது. அதை இன்னும்செய்யவில்லை. பெட்ரோல் டீசல் விலையேற்றத்தால் மேலும் 1.20 ரூபாய் தமிழக அரசின் லாபம் அதிகரித்துஉள்ளது. நியாயமாக தமிழக அரசு 6.20 ரூபாய் குறைக்க வேண்டும். தமிழக நிதியமைச்சரை கேட்டால் காலம் நேரம் குறித்து பேசுகிறார்.

மேலும் தமிழக ஆளும் கட்சி திமுக மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து அண்ணாமலை பேசியதாவது : தமிழகம் முழுவதும் பா.ஜ.கவை மேலும் வலுப்படுத்த மாநிலம் முழுவதும் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் செல்வேன். ஊரடங்கு தளர்வு வந்தால் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தவுள்ளோம். பா.ஜ.க சித்தாந்த அடிப்படையிலான கட்சி. தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.கவின் தவறுகளை பாஜக தொடர்ந்து சுட்டிகாட்டும். மக்கள் பா.ஜ.கவின்பக்கம் வருவர்கள். பிரதமர் மோடியின் பல்வேறு நலத்திட்டங்களால் தமிழகத்தில் மூன்றரை கோடி மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

மேலும் தொலைபேசி ஒட்டு கேட்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அண்ணாமலை பெகாசஸ் மூலம் அரசியல் கட்சி தலைவர்களின் அலைபேசி பேச்சை ஒட்டு கேட்பதாக மத்திய அரசு மீதான குற்றச்சாட்டிற்கு மத்தியமைச்சர் பதிலளித்துள்ளார். வாட்ஸ் ஆப் நிறுவனம் பெகாசஸ் மூலம் உரையாடலின் போது கிராஸ் பண்ண முடியாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கலான பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெகாசஸ் சாப்ட்வேரில் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல. அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தி தான் ஒட்டு கேட்பு விவகாரம். என தெரிவித்ததார்.

இதனை தொடர்ந்து வேல் யாத்திரை மக்களின் வேள்விக்காக நடத்தப்பட்டது. மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் பா.ஜ.கவின் யாத்திரைகள். தி.மு.க விற்கு பா.ஜ.,க தான் எதிரி . நாங்கள் திராவிட சித்தாந்தம் பேச விரும்பவில்லை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல தி.மு.க.வில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளது தான் அதன் சித்தாந்தம். தி.மு.க.தேர்தலில் பொய் சித்தாந்தத்தை கூறி தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெற்றுள்ளது. என அண்ணாமலை பேசினார்.

Exit mobile version