களிமண் – புண்ணியம், திருட்டு மண்-பாவம் செந்தில் பாலாஜியை வச்சு செய்த பாஜக தலைவர் அண்ணாமலை!

தமிழகத்தின் தற்போது ஹாட் டாபிக் தி.மு.கவின் மின்சார ஊழல். மின்சாரம் தயாரிக்க இயலாத வலுவிழந்த நிறுவனத்திற்கு திமுக அரசு 5000 கோடி ஓப்பந்தம் போடுவதற்கு முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. என அண்ணாமலை கூறினார். இது தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பியது.

அதன் பின் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் (டிடிபிஎஸ்) ஒப்பந்ததாரர்களுக்கு கடந்த பல மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை. 4% கமிஷனை எடுத்துக் கொண்ட பிறகு சமீபத்திய நாட்களில் திடீரென்று INR 29.64 கோடி பணம் செலுத்தப்பட்டது. ஏன் பதில் சொல்லுங்கள் பாலாஜி என மின்வாரியத்தில் நடைபெற்ற கமிஷன் ஊழலை வெளிகொண்டுவந்தார் அண்ணாமலை

அதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பதில் இல்லை. அதின் பின் அண்ணாமலை மேலும் ஒரு ட்வீட் செய்தார் அதில் கோபாலபுரம்-பிஜிஆர் எனர்ஜி -மின்சார அமைச்சகம் -செந்தில் பாலாஜி இந்தப் புள்ளிகளை இணைத்து பாருங்கள்..விடை எளிதில் புரியும் ! என ஒரு ட்வீட் செய்தார்.

இது தமிழகத்தில் மேலும் ஒரு புயலை வீசியது. இதன் பின் திடீரென்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்றார் செந்தில் பாலாஜி. அங்கு வைத்து செய்தியாளர்களை சந்தித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி பி.ஜி.ஆர் தனியார் நிறுவனத்திற்கு மின்சார வாரியம் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன் என்று கூறிய பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை அவர்கள் ஆதாரமில்லாமல் பேசுகிறார் .

24 மணி நேரத்திற்குள் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை வழங்க வேண்டும், இல்லையென்றால் கட்டாயமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.அண்ணாமலைக்கு அரசியலில் அரிச்சுவடி கூட தெரியாது. தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது என தரக்குறைவாக பேசினார்.

இந்த நிலையில் மாலை செய்தியாளர்கள் சந்திப்பில் இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மன்னிப்பு கேட்க முடியாது வழக்கு போடுங்கள் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மேலும் களிமண் குறித்த செந்தில் பாலாஜியின் கருத்து குறித்து அவர் ட்வீட்

மணல் திருடும் அமைச்சர்அவர்கள் என் மண்டையில் களிமண் என்கிறார்.இருக்கட்டும், எனக்கு பெருமை தான், களிமண்ணை வைத்து பிள்ளையார் சிலை செய்து புண்ணியம் தேடலாம். திருட்டு மண்ணை வைத்து பாவம் மட்டுமே சம்பாதிக்க முடியும்!!!நினைவிருக்கிறதா 11 மணி 05 நிமிடம் வாக்குறுதி என பதிலளித்தார்

Exit mobile version