அதிரடி பிளான் பாஜகவின் தெலுங்கானா டு தமிழ்நாடு…. பக்காவாக ஸ்கெட்ச் போட்ட அமித்ஷா…

அதிரடி பிளான் பா.ஜ.கவின் தெலுங்கானா டு தமிழ்நாடு…. பக்காவாக ஸ்கெட்ச் போட்ட அமித் ஷா பி.எல்.சந்தோஷ் …..

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது, அதற்கு முன்னோட்டமாக வரும் டிசம்பர் மாதம் 5 மாநில தேர்தல்கள் நடைபெற உள்ளது. இதில் தென் இந்தியாவில் கர்நாடகாவிற்கு இந்த வருடமும் அடுத்த வருடம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகவில் ஆளும் பா.ஜ.க ஆட்சி நடைபெறுகிறது. மீண்டும் கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற எட்டியூரப்பாவுக்கு பா.ஜ.கவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான பா.ஜ.க உயர்மட்ட குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் எட்டியூரப்பா ஆதரவு வாக்குகள் சிதறாமல் இருக்கும் என பா.ஜ.க மேலிடம் முடிவு செய்தது.

இதே போல் தெலுங்கானாவில் பாஜகவின் கையை உயர்த்துவதற்காக பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டம் கடந்த ஜூலை மாதத்தில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லி அல்லாத வேறு இடத்தில் நடத்தப்பட்ட பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் கூட்டம் இதுதான். `தென்னிந்தியாவில் லோட்டஸ் திட்டத்தின் அடித்தளம் இங்குதான் போடப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலம்தான், இந்தத் திட்டத்தில் பா.ஜ.க-வின் முதல் இலக்காக இருக்கிறது. தெலங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், இப்போதே அதிரடியாகக் களமிறங்கிவிட்டது பா.ஜ.க. இந்த அதிரடிகளை, ‘தெலங்கானா ராஷ்டிர சமிதி’ கட்சியின் தலைவரும், அந்த மாநிலத்தின் முதல்வருமான சந்திரசேகர் ராவ் எப்படிச் சமாளிக்கப்போகிறார்?

தென்னிந்தியாவில் லோட்டாஸ்
வட மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., தற்போது தென் மாநிலங்களில் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் இத்திட்டத்தினை கையில் எடுத்துள்ளவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
“இந்தியாவில் அடுத்து 30, 40 ஆண்டுகள் பா.ஜ.க-வின் ராஜ்ஜியம்தான். நமது அடுத்த இலக்கு தென்னிந்தியாதான். குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் விரைவில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்’’ என்று நிர்வாகிகளிடையே முழங்கினார் அமித் ஷா.

அந்தக் கூட்டம் முடிந்த மூன்று நாள்களில், தென் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு ராஜ்ய சபா நியமன எம்.பி பதவிகளை ஒதுக்கியது பா.ஜ.க. கேரளாவைச் சேர்ந்த வீராங்கனை பி.டி.உஷா, தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் இளையராஜா, ஆந்திராவைச் சேர்ந்த திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரேந்திர ஹெக்டே ஆகியோர்தான் அந்த நால்வர்.

நான்கு தென் மாநிலங்களில் முதல் இலக்காக, அடுத்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருக்கும் தெலங்கானாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறது பா.ஜ.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஆட்சியில் அமர்ந்திருக்கும் கே.சி.ஆர் அரசு மீதான அதிருப்தியைப் பயன்படுத்தி, அங்கு ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற திட்டத்திலிருக்கிறது. மே, ஜூலை மாதங்களில் தெலங்கானா வந்த பிரதமர் மோடி, கே.சி.ஆர் தன் மகனுக்கும் மகளுக்கும் அரசியல் பதவிகளை வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி, `தெலங்கானா வாரிசு அரசியலால் சீரழிந்துவருகிறது’ என்று விமர்சித்தார்.

தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்துக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ தனியாகச் சந்தித்துப் பேசினார். `ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் நடிப்பு குறித்து பாராட்டத்தான் இந்தச் சந்திப்பு என பா.ஜ.க தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், “தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் பேரன்தான் ஜூனியர் என்.டி.ஆர். தற்போது தெலுங்கு தேசம் கட்சியின் தலைவராக இருக்கும் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆரின் அத்தையைத்தான் திருமணம் செய்திருக்கிறார். எனவே, அந்தக் கட்சியோடு விட்டுப்போன கூட்டணியை அடுத்த தேர்தலுக்குள் சரிக்கட்டவே, இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்க வேண்டும். 2009-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காகத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் ஜூனியர் என்.டி.ஆர். அதன் பிறகு, அரசியலைவிட்டு விலகியிருக்கும் அவரைத் தற்போது அமித் ஷா சந்தித்ததன் மூலம், அவருடைய ரசிகர்களின் கவனத்தை பா.ஜ.க பக்கம் திருப்புவது ஒரு திட்டமாக இருந்திருக்கலாம்’’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

இதைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலுள்ள இளம் நடிகரான நிதின், ஹைதராபாத்தில் வசிக்கும் கிரிக்கெட்டரான மிதாலி ராஜ் ஆகியோரைச் சந்தித்தார் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. தொடர்ந்து, தெலங்கானாவிலுள்ள நட்சத்திரங்களைச் சந்திக்கும் திட்டங்களை பா.ஜ.க-வினர் வைத்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடக்கவிருந்த பாலிவுட் படமான `பிரம்மாஸ்த்ரா’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களைக் காரணம் காட்டி, அரசு பாதுகாப்பு தர மறுக்க, அந்த நிகழ்ச்சி ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. “இந்த நிகழ்ச்சியில், ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொள்வதால்தான் கே.சி.ஆர் அரசு அனுமதி மறுத்துவிட்டது. இந்த நிகழ்வு ஊருக்கு வெளியில் நடக்கிறது; அதுவும் பத்திரிகை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே வர முடியும். இப்படியான நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது’’ என்கின்றனர் பா.ஜ.க-வினர்.

2020 ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலில் டி.ஆர்.எஸ் கட்சிக்கு இணையாகக் கிடைத்த வெற்றி, 2021 ஹுஸுராபாத் (Huzurabad) இடைத்தேர்தல் வெற்றி உள்ளிட்டவற்றால் தெலங்கானாவில் உற்சாகத்துடன் வேலை செய்துவருகிறது பா.ஜ.க. அங்குள்ள 119 தொகுதிகளுக்கும் மத்திய அமைச்சர்கள், தேசிய நிர்வாகிகள் நேரில் சென்று ஆய்வுசெய்தது பா.ஜ.க-வின் மைலேஜை அதிகரித்திருக்கிறது.

மொத்தமுள்ள 119 தொகுதிகளில், 100 தொகுதிகளைக் கையில் வைத்திருக்கும் டி.ஆர்.எஸ் கட்சியை, தெலங்கானாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற வளர்ச்சியால் அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.க. இந்த அச்சுறுத்தலிலிருந்து சந்திரசேகர் ராவ், டி.ஆர்.எஸ்-ஸை எப்படி மீட்டெடுத்துக் கரை சேர்க்கப்போகிறார் என்பதை, அவரது அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள்தான் முடிவுசெய்யும்!

இதே போல் தமிழகத்தில் அமித்ஷா மற்றும் அமைப்பு பொதுச்செயலார் பி.எல்.சந்தோஷ் போட்ட பிளான் மெதுவாக வெற்றியடைந்து வருகிறது.முதல் பிளான் அண்ணாமலை தலைவராக நியமித்தது, திமுகவிற்கு எதிராக கொம்பு சீவி விடப்பட்ட காளை களத்தில் எதிராளிகளை தும்சம் செய்து வருகிறது. மேலும் திமுக அரசின் மேல் மக்களுக்கு வெறுப்பு வர தொடங்கியுள்ளது. மேலும் வெறுப்பு உச்சக்கட்டத்தில் இருக்கும் சமயத்தில் திமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை தட்டி எடுத்து மேஜையில் வைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்து மதம் பற்றி அவதூறாக பேசியவர்களின் பைல்களை மேஜைக்கு கொண்டுவர சொல்லியுள்ளார் அமித் ஷா.

தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் திமுக கவுன்சிலர் வரை அவர்கள் மேல் உள்ள குற்றங்கள் என்ன என்ன அதற்கான நடவடிக்கை என்ன என அலசி ஆராய்ந்து வருகிறது அமித் ஷா டீம். மேலும் ரகசியமாக தமிழகத்தை கண்காணிக்க அமித் ஷா அவர்களின் டீம் தமிழகத்தில் களமிறங்கியுள்ளது. அந்த டீம் அறிக்கை அடிப்படையில் பா.ஜ.கவின் பயணம் தொடரும் என்கிறார்கள்.

Exit mobile version