மாணவி லாவண்யா மரணம்… பா.ஜ.க போராட்டம்… சி.பி.ஐ க்கு மாற்றப்படுகிறதா வழக்கு.. #JusticeForLavanya

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர், தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளர்

இந்த நிலையில் மாணவி லாவண்யா திடீரென விஷம் குடித்தார். உடனடியாக அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறை வழக்குப்பதிவு செய்து பள்ளி விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்தனர்
இந்த நிலையில் இறப்பதற்கு முன் லாவண்யா பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் இரண்டாண்டுக்கு முன் எனது பெற்றோர்களிடம் பள்ளி ஆசிரியர்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாற சொன்னதாகவும் மதம் மாற மறுத்ததை தொடர்ந்து மாணவி என்னை கொடுமைபடுத்தியதாக மாணவி லாவண்யா கூறியுள்ளார். இதே போல் அவரது பெற்றோரும் கூறினார்கள்.

இந்த நிலையில் மாணவி லாவண்யா மரணத்திற்கு நீதி கேட்டு பா.ஜ.க தமிழகம் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தது . மேலும் சமூக வலைத்தளங்களில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பதிவிட்ட ‘ஹேஷ்டேக்’ தேசிய அளவில் ‘ட்ரெண்ட்’ ஆனது.

இந்த நிலையில் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்.பி., ரவுளி பிரியா விளக்கம் அளித்துள்ளார்.மாணவி ஜன., 19ல் உயிரிழந்தார், முன்னதாக, 16ம் தேதி தஞ்சாவூர் நீதித்துறை நடுவரிடம் வாக்குமூலம் அளித்தார்.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த மாணவி தங்கியிருந்த விடுதியின் நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன்தொடர்ச்சியாக மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்டு, பா.ஜ.க மற்றும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவியின் மரண வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பல தரப்பிலும் வலுத்து வருகிறது. இந்நிலையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கேட்டு ஒரு ‘ஹேஷ்டேக்’கை பா.ஜ.க வினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த ‘ஹேஷ்டேக்’ தேசிய அளவில், ‘ட்ரெண்ட்’ ஆகியுள்ளது.

இதனிடையே, சி.பி.ஐ., முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ், மாணவி உயிரிழப்பு விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கும் தஞ்சாவூர் எஸ்.பி., மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் டெல்லி மேல்மட்டத்தில் லாவண்யா மரணம் தொடர்பாக குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சரிடம் பேசியுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அண்ணாமலை அவர்களும் சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்கள். இதனால் விரைவில் வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version