பா.ஜ.க வின் அடுத்தடுத்த அதிரடியும் வினோஜ் செல்வத்தின் ட்விட்டும்! பரபரக்கும் அரசியல்!

தமிழக பா.ஜ.க தொடர் முன்னேற்ற பாதையில் இருக்கிறது தலைவர் இல்லாத போதும் உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட தக்க வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தமிழக பா.ஜ.கவிற்கு புதிய தலைவர் எல்.முருகனை நியமித்தது அதன் தேசிய தலைமை இவர் பட்டியல் இனத்தை சார்ந்தவர் என்பது பா.ஜ.கவிற்கு கூடுதல் கூடுதல் பலத்தை அளித்தது இதனை சற்றும் எதிர்பார்க்காத தமிழக அரசியல் கட்சிகள் சற்று அதிர்ச்சி அடைந்தது உண்மையே.

இந்த நிலையில் முன்னாள் தி.மு.கவின் துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி பாஜகவில் ஐக்கியமானார். இதிலிருந்து திமுக மீள்வதற்குள் அடுத்தடுத்து ஷாக் கொடுத்து பா.ஜ.க பல்வேறு திமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பா.ஜ.கவை நோக்கி வர தொடங்கினார்கள். கோவையில் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.

அண்ணாமலை மற்றொரு புறம் கொங்கு பகுதி முழுவதும் பாஜகவினரை சந்தித்து வருகிறார், பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பணிகளை மேற்கொண்டு வருகிறார், இந்த நிலையில் எந்த ஆண்டும் இல்லாத அளவாக பாஜகவை நோக்கி திமுகவினர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

பாஜகவின் அடுத்த மூவ் தி.மு.க வை அதிர்ச்சி அடைய செய்தது. அதுதான் பால் கனகராஜ் பாஜகவில் இணைந்தது அதுமட்டுமில்லமல் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் டாக்டர் .A.முகமது ஃபெரோஸ் அவர்களும் இணைந்தார்.இவர்களுடன் சுமார் 50 பேர் இணைந்தனர். இஸ்லாமியர்களும் பாஜகவை நோக்கி வர தொடங்கியுள்ளது திமுகவிற்கு சற்று கிலியை ஏற்படுத்தியது

மேலும் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏ குக.செல்வம், இராமநாதபுரம் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகி கதிரவன், கோயம்புத்தூர் திமுக நிர்வாகிகள் என தலைமை கழக நிர்வாகிகள் தொடங்கி, கிளைக்கழக நிர்வாகிகள் வரை பாஜக நோக்கி இணைந்து வருகின்றனர், இந்நிலையில் தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,

அடுத்த ஒரு வாரத்தில் பாஜகவில் மிக பெரிய நபர்கள் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார், இதற்கு முன்னர் கு.க.செல்வம், அண்ணாமலை போன்றோர் பாஜகவில் இணையும் முன்பு சூசகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் வினோஜ், எனவே இன்றைய அவரின் ட்விட்டர் பதிவு முக்கிய கவனம் பெற்றது

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு.பாஜக தேசிய பொதுச் செயலாளர் CT ரவி தலைமையில் பாஜக தமிழக தலைவர் முருகன் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்து கொண்டார். மேலும் சரவணகுமார் IRS ஊடகவியலாளர் மதன் ரவிசந்திரன் உள்ளிட்டோரும் பாஜகவில் இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

பாஜக இளைஞர் அணி தலைவர் திரு.வினோஜ் அவர்கள் மாற்று கட்சியினரை பாஜகவில் இணைப்பதற்கு திரைமறைவாக செயல்பட்டு வருகிறார். என்பது தெளிவாக தெரிகிறது.

Exit mobile version