பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய தமிழக பாஜக இளைஞரணி.

நடந்து முடிந்த +2 தேர்வுகளின் முடிவில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சார்ந்த முருகன் மகள் தேவயானி என்ற மாணவி பழங்குடி வகுப்பை சார்ந்த ஏழை மாணவி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 500/ 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

மாணவி தேவயானி வீட்டில் மின்விளக்கு இணைப்பு இல்லாத்தால் தெருவிளக்கில் கஷ்டப்பட்டு படித்து சாதனை படைத்துள்ள மாணவியின் எழுமைநிலை பற்றி தகவலை அறிந்த தமிழக பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள இளைஞரணி மாநில செயலாளர் சங்கரபாண்டியனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்த மாணவியின் கல்லூரி படிப்பிற்கான மொத்த செலவையும் தமிழக பாஜக இளைஞரணி ஏற்கும் என்று கூறியுள்ளார் .

உடனே இளைஞரணி மாநில செயலாளர் சங்கரபாண்டியன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் மாணவி தேவயானி வீடிற்கு நேரில் சென்று மனைவியின் சாதனை பாராட்டும் விதமாக அவருக்கான கல்வி கல்லூரி படிப்பினையும் மற்றும் கல்லூரி மேற்படிப்பு வரை படிப்பதற்கான செலவு முழுவதையும் பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்து வந்துள்ளனர்.

Exit mobile version