CAA-வுக்கு எதிராக போராட்டம் நடத்தும் மு.க.ஸ்டாலினின் முகத்திரையை கிழித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

என்.பி.ஆர் என்பது மிகவும் அவசியமானது. முக்கியமானது. 2010-ஆம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியிலும் நடைமுறைப்படுத்தினார்கள். 2015-லும் கணக்கெடுக்கப்பட்டது. இப்போது 2021-இல் கணக்கெடுப்பு நடத்திதான் ஆக வேண்டும்.

யார் வெளிநாட்டை சேர்ந்தவர்? யார் உள்நாட்டை சேர்ந்தவர் என்பது தெரிய வேண்டாமா? எனவே இது மிக மிக தேவையானது. கணக்கெடுப்பு நடத்திதான் ஆகவேண்டும்.

என்.சி.ஆரை பொருத்தவரை இன்னும் அது அமல்படுத்தப்படவில்லை. அது பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர். அது பற்றி இறுதி வடிவம் வரும்போது, முழுமையாக தெரிந்த பிறகுதான் அது பற்றி சொல்ல முடியும்.

சி.ஏ.பற்றி அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார்கள். இந்தியாவில் வாழும் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும், பிரச்சனையும் கிடையாது என்பதை திட்டவட்டமாக சொல்லி விட்டார்கள். அவர்களின் குடியுரிமை இழக்கப் போவதில்லை. மற்ற நாடுகளில் இருந்து இங்கே வந்தவர்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டுமா? வேண்டாமா என்பது தான் பிரச்சனை.

முக்கியமாக முஸ்லிம்களுக்கு இதன் மூலம் பெரிய பாதிப்பு என்பது போல் பீதியை கிளப்பி உள்ளார்கள். முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தால் எப்படி அச்சுறுத்தல் ஏற்படும்?

இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறது என்றால், பிரிவினை காலகட்டத்தில் விருப்பப்பட்ட இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு சென்றார்கள். இங்கே இருக்கின்ற இஸ்லாமியர்கள், இந்த நாடுதான் நமது நாடு, நமது ஜென்மபூமி. இதுதான் நமது மண். இங்குதான் வாழ்வோம், இங்கேதான் சாவோம் என்று சொல்லி அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை எப்படி இந்த நாட்டை விட்டு வெளியே அனுப்ப முடியும்?

அந்த மாதிரி ஏதாவது நடந்தால், இந்த ரஜினிகாந்த் அவர்களுக்காக முதலில் குரல் கொடுப்பான். நான் முதல் ஆளாக முன் வந்து நிற்பேன். ஆனால் அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது.

இதை சில அரசியல் கட்சிகள், அவர்களின் சுயநலத்திற்காக, சுய லாபத்திற்காக இதனைத் தூண்டி விடுகிறார்கள். இதற்கு மதகுருக்கள் துணை போகிறார்கள். இது மிக மிக தவறான விஷயம்.

இதில் முக்கியமாக மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் போராட்டங்களில் இறங்கும்போது தயவு செய்து தீர ஆராய்ந்து யோசித்து உங்களின் பேராசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு இறங்குங்கள். இல்லாவிட்டால் அரசியல்வாதிகள் உங்களை தவறாக பயன்படுத்த பார்ப்பார்கள். போராட்டங்களில் இறங்கினால், உங்களுக்குதான் பிரச்சனை. போலீஸ்காரர்கள் யார் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது.

ஆதலால் உங்கள் மீது எப்.ஐ.ஆர் ஏதாவது போட்டார்கள் என்றால் உங்கள் வாழ்க்கை முடிந்து போய்விடும். அதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இதன் மூலம் CAA-வுக்கு எதிராக போராடி வரும் மு.க.ஸ்டாலினின் முகத்திரையை கிழித்து உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Exit mobile version