கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கனமழை பெய்து வருகிறது. மழைக்காலமான இந்த மாதங்களில் அடிக்கடி நிலச்சரிவு சம்பவங்களும் நடப்பது தொடர்ந்து...
பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை மையமாகக் கொண்ட 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். வளர்ச்சியடைந்த பாரதம் 2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் மாநிலங்களின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும் கூட்டத்தில் இடம்பெறும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய அபிலாஷைகளுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை அடைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை தேவைப்படும். 9வது நிர்வாகக் குழு கூட்டம், மத்திய, மாநிலங்களுக்கு இடையே 'டீம் இந்தியா' என்ற குழுப்பணியை ஊக்குவித்து, இந்த தொலைநோக்குக்கான வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 டிசம்பர் 27-29 தேதிகளில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகள் மீதும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கவனம் செலுத்தும். 'வாழ்க்கையை எளிதாக்குதல்' என்ற பொதுவான கருப்பொருளின் கீழ், தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து பரிந்துரைகள் செய்யப்பட்டன: 1.குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம் 2. மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை...
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வரும் 'முத்ரா' கடன் திட்டத்தில் வரம்பை, தற்போதுள்ள 10 லட்சம் ரூபாயிலிருந்து,ரூ. 20 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்குவதாக நேற்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது....
3வது முறையாக பிரதமராக பதவியேற்ற பின் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு முதன்முதலில் சென்றார். மாஸ்கோ விமான நிலையம் சென்றடைந்த அவரை அந்நாட்டு மூத்த துணைப்...
பாரதிய ஜனதா கட்சி கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெரிய அரசியல் சக்தியாக இருந்து வருகிறது தென்னிந்தியாவில் ஏற்றம் இறக்கம் என இருந்து கொண்டே வருகிறது ....
இந்திய பெரும் தொழிலதிபர்களுள் ஒருவரான கௌதம் அதானி அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார். கனிமொழி மற்றும் திமுகவினரால் மோடியின் சாகாக்கள் என கூறும்...
சத்தீஸ்கரில் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு ரூ.660 கோடிக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. 2022- 23 மற்றும் 2023 - 24 நிதியாண்டில் எந்த...
சென்னை கோயம்பேட்டில் பதுங்கியிருந்த அல்கொய்தா தீவிரவாத அமைப்பு மேற்கு வங்க பயங்கரவாதி கைது.வங்கதேச நாட்டை தளமாகக் கொண்டு ‘அல் கொய்தா’ பயங்கரவாத இயக்கத்தின் சித்தாந்ததின் அடிப்படையில் ‘அன்சாா்...
பாரத பிரதமர் மோடியின் துறைகள் :-பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்; அணுசக்தி துறை; விண்வெளி துறை; அனைத்து முக்கியமான கொள்கை சிக்கல்கள்; மற்றும் எந்த...
பாரத பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து,டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவிற்கான...