Get real time update about this post category directly on your device, subscribe now.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கன்யாகுமரி மாவட்டத்தின் அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்...
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக அனைவருக்கும் தெரிந்த யாஷிகா ஆனந்த் நேற்று இரவு நடந்த கோர விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவருடன் சென்ற நண்பர்கள் 3...
கன்யாகுமரி மாவட்டத்தில் அருமனை அருகே பனங்கரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை...
குமரி மாவட்டத்தில் , அருமனை அருகே பனங்கரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு...
திமுக ஆட்சிக்கு வந்ததும் திமுக தலைவர் திமுக நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தார் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திமுகவினர் ஈடுப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்...
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். நீட்...
நாடளுமன்ற கூட்ட தொடர் நடந்து வரும் சூழலில் எதாவது பிரச்சனையை கிளப்பிவிட்டு நாடளுமன்றத்தினை முடக்குவது எதிர்கட்சிகளுக்கு வாடிக்கையான ஒன்று . இந்த மழை கூட்ட தொடரில் பெகாசஸ்...
1920 ஆம் ஆண்டு பனகல் அரசர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்த அனைத்து திருக்கோயில்களையும், அரசின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வர முயற்சித்தார். இதற்காக...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதிரியார் பாரத மாதா பற்றி மிகவும் கொச்சையாக பேசியுள்ளார். மேலும் திமுக ஜெயித்தது...
