ஆர்.எஸ்.எஸ் உள்ளே வந்துருச்சு! ஒருபக்கம் திருமாவளவன் ஒருபக்கம் கீ.வீரமணி புலம்பல்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் தான் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.ஸும் தமிழகத்தில் தனது சேவைகள் மூலம் காலூன்றி வருகிறது. இது திமுக கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் பெரிய அளவில் வெளியே தெரியாத பா.ஜ.க திமுக ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தமிழகத்தின் எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் சற்று கலக்கமடைந்துள்ளது. ஏனெனன்றால் திமுகபெரிய அளவில் பாஜகவை எதிர்க்கவில்லை. அமைச்சர்கள் பாஜக பற்றி பேசினால் திமுக தலைமை அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறது. நீட் தேர்வுக்கு பிறகு உதயநிதி சுத்தமாக அரசியலில் காணவில்லை. மத்திய அரசின் திட்டங்களை எதிர் கட்சியாக இருந்தபோது எதிர்த்த திமுக தற்போது வரவேற்று தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது.

அதில் ஒன்றுதான் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை ஆனால், தி.மு.க ஆட்சியில் இல்லாதவேளையில் இத்திட்டத்தினை எதிர்த்து போராடியது. ஆனால் தற்போது அதை செய்லடுத்தி வருகிறது. புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதி இல்லம் தேடி கல்வித் திட்டம் இந்தத் திட்டம்தமிழகத்தில் துவங்கப்படுவதற்கு முன்பாகவே திமுகவின் தாய் கழகம் திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து அறிக்கைகளை வெளியிட்டனர். “இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். பாராட்டும் கல்விக் கொள்கையின் நுழைவுதான்” என இதனைக் கடுமையாக விமர்சித்தார் கி. வீரமணி.

இந்த நிலையில் திருமாவளவனும் ஆர்.எஸ்.எஸ் குறித்து புலம்ப ஆரம்பித்து விட்டார். விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் ஆர்.எஸ்.எஸ் குறித்து புலம்ப ஆரம்பித்தார். அவர் பேசியதாவது திருவிழாக்களுக்கு உதவி செய்வது போலவும், சாமி சிலைகளை வாங்கிக் கொடுப்பது போலவும் உதவி செய்து தமிழகத்தில் இன்று கிராமங்கள் தோறும் சங்பரிவார்கள் தங்கள் கால் தடத்தை பதித்துவிட்டார்கள் என திருமாவளவன் தெரிவித்தார்.

கிராமம் கிராமமாக சென்று தன்னார்வலர்களாக சங் பரிவார்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நுழைந்துவிட்டார்கள். தமிழக அரசினை குறி வைத்து விட்டார்கள் என புலம்பி தள்ளியுள்ளார் திருமாவளவன். ஒருபக்கம் வீரமணி ஒருபக்கம் திருமா ஆர்.எஸ்.எஸ் உள்ளே வந்துருச்சு என கூறி வருகின்றார்கள்.

Exit mobile version