சனாதனம் குறித்து கருத்து … பல்டி அடித்த உதயநிதி .. X தளத்தில் ட்ரெண்டாகும் #மண்டியிட்ட_உதய் !

உதயநிதி – ஆட்சியே போனால் பரவாயில்ல சனாதனத்தை ஒழிப்பேன். சனாதனம் குறித்த கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து .

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.உதயநிதி மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி சனாதனத்தை டெங்கு,மலேரியா, கொரோனாவோடு ஒப்பிட்டு பேசி அவற்றை ஒழிப்பதுபோல்சனாதனத்தையும் ஒழிக்கவேண்டும் என்று பேசினார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையாகவே ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.

அப்போது அமைச்சர் உதயநிதி தனது நிலைப்பாட்டிலிருந்து சற்று மாறி தற்போது நான் சனாதனத்தை தான் ஒழிப்பேன் என்று சொன்னேன் ஹிந்து மதத்தை அல்ல என்று பேசியிருக்கிறார்.

ஆரம்பம் முதலே ஹிந்து மதமும் சனாதனமும் ஒன்று என்று கூறப்பட்ட நிலையில் அதற்கு சான்று தருவகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அறிவியலும் இந்திய பண்பாடும் என்று புத்தகத்தில் இந்து மதம் குறித்த விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
நமது பண்பாட்டில் சமயங்கள் செல்வாக்குடன் இன்றளவும் விளங்குகின்றன. இந்தியா, பல சமயங்களின் தாயகமாகும். இவ்வாறு சமய வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்தியாவின் தனித்த அடையாளமாகும்.ஹிந்து மதமும் சனாதனமும் ஒன்று என்று விளக்கமளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, “சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை . சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது”, என தெரிவிக்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் தரப்பினரின் இந்தக் கருத்து உதயநிதிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது மேலும் எந்த வழக்கையும் சந்திப்பேன் ஆட்சியே போனாலும் பரவாயில்லை என மீடியாக்கள் முன் வீரமாக பேசிவிட்டு தற்போது நான் தனிப்பட்ட முறையில் தான் பேசினேன் என பல்டி அடித்துள்ளார் உதயநிதி…

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதம் என்று உணர்ந்ததால் தான் அமைச்சராக பேசவில்லை, தனிப்பட்ட முறையில் பேசினேன் என்று பதவி போய் விடுமோ என்ற பயத்தில் பம்முகிறீர்கள்.என X தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்

மேலும் உதயநிதி – ஆட்சியே போனால் பரவாயில்ல சனாதனத்தை ஒழிப்பேன். சனாதனம் குறித்த கருத்து என்னுடைய தனிப்பட்ட கருத்து என பதிந்து #மண்டியிட்ட_உதய் என ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்

Exit mobile version