டில்லியில் நடந்த காங்கிரஸ் நிறுவன நாள் விழாவில், கம்பத்தில் ஏற்றும்போது கொடி கழன்று கட்சியின் தலைவர் சோனியாவின் கைகளில் விழுந்தது. இதனால், ‘கொடியைக் கூட சரியாக கட்ட முடியாத நிலையில் தான், நம் கட்சி உள்ளது’ என, தொண்டர்கள் வருத்தப்பட்டனர்.
137 வது துவக்க தினம்
காங்கிரஸ் கட்சி ௧௮௮௫ல் ஆண்டு துவக்கப்பட்டது. கட்சியின் 137 வது துவக்க தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி நாடு முழுதும் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் சிறப்பு நிகழ்சசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா, கொடியை ஏற்றத் துவங்கினார்.
வெள்ளை நிற கதர் ஆடை அணிந்து கட்சிக் கொடி ஏந்தியிருந்த தொண்டர்கள் கொடி வணக்கம் செலுத்த அணிவகுத்திருந்தனர்.அப்போது கொடி திடீரென கழன்று சோனியாவின் கைகளில் விழுந்தது. இதனால் சோனியா மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதன்பின் புதிய கொடியை சோனியா ஏற்றினார். இது தொடர்பான ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, ராகுல் உட்பட மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். சவால்கள்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொண்டர்கள், ‘பாரம்பரியம்மிக்கது காங்கிரஸ் கட்சி. ஆனால் தற்போதுள்ள நிர்வாகிகளால் கட்சி கொடியைக் கூட ஒழுங்காக கட்ட முடியவில்லை’ என, வருத்தப்பட்டனர்.
இதற்கிடையே காங்கிரசின் நிறுவன தினத்தை முன்னிட்டு சோனியா வெளியிட்ட ‘வீடியோ’வில் கூறிஇருந்ததாவது:கொள்கைகள், சித்தாந்தங்களில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்யாது.காங்கிரஸ் பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது; சவால்களை எதிர்த்து போராடியுள்ளது.வரலாற்றை மாற்றி எழுதி, மக்களிடம் உணர்ச்சிகளைத் துாண்டி, பயத்தை உண்டாக்கி, பகைமையை பரப்பும் முயற்சியை சில கட்சிகள் மேற்கொண்டுள்ளன. நம் பார்லிமென்ட் ஜனநாயகத்தின் மிகச்சிறந்த மரபுகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்படுகின்றன. இது போன்ற நேரங்களில் காங்கிரஸ் அமைதியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















