காங்கிரஸ் ஆட்சியில் போது ரூ. 9000 கோடி கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றவர் விஜய் மல்லையா. இவர் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சி தனியாக நடந்து வரும் நிலையில், மல்லையாவிடம் இருந்து – 14131 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது மத்திய பாஜக அரசு.
புதுடில்லி, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தொடர்புடைய அசையா சொத்துகளை முடக்கி, அவற்றை விரைவாக மீட்டு கொடுப்பதில் அமலாக்கத்துறை தீவிர கவனம் செலுத்துகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 16,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை உரியவர்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளது.சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்குவது வழக்கம்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் ஏமாந்தவர்களுக்கு, அந்த சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுக் கொடுக்கும். 2018ம் ஆண்டுக்கு முந்தைய, பி.எம்.எல்.ஏ., எனப்படும் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகே, முடக்கப்பட்ட சொத்துகள் மீட்டுத் தரப்பட்டன. இதற்கு மிகவும் கால தாமதமானது.
இந்நிலையில், 2018 நிதிச் சட்டத்தின் கீழ், வழக்கு நடைபெறும்போதே, முறைகேடு தொடர்புடைய சொத்துகளை சிறப்பு நீதிமன்றங்களில் உத்தரவு பெற்று முடக்கவும், பணத்தை இழந்தவர்களுக்கு அவற்றை உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கவும் அமலாக்கத் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
அதன்பின், இதுவரை மொத்தம் 16,400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்க துறை முடக்கி, பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது. அவற்றில் மூன்று முக்கிய வழக்குகளில் மட்டும் 14,131 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் இடம்பெற்றன.
விஜய் மல்லையா, நிரவ் மோடி ஆகியோர் தேடப்படும் பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்களது சொத்துகளை முடக்கி, உரியவர்களிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது. பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதது தொடர்பான இவர்களது வழக்கில், பொது நல நோக்கில் சொத்துகளை முடக்கி, வங்கிகளிடம் அமலாக்கத்துறை ஒப்படைத்தது.